சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்

0
4711

சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகமானது   வெள்ளிக் கிழமையும், ஐப்பசி மாத பவுர்ணமி சேர்த்து வந்த நன் நாளாகிய 03.11.2017அன்று அதிகமான சிவனடியார்களுடன்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

அன்னாபிசேகம்.

ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நண்பகலில் சிவ ஆலயங்களில் சாதம் வடித்துசிவனை முழுமையாக மறைக்கும் அளவிற்கு சாத்தி சிவனிற்கு அன்னத்தால்அபிசேகம் செய்வர். பின்னர் அதில் ஒரு சிறிய பகுதியை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பர். இது அந்த நீர் நிலைகளில் உள்ள சீவராசிகளிற்கு சிவனனின்அபிசேக அன்னம் கிடைப்பதற்காக செய்யப்பட்ட ஒரு ஏற்பாடாகும். அபிசேகஅன்னத்தில் தயிர் சேர்த்து பக்தர்களிற்கு பிரசாதமாக கொடுப்பர். இந்தஅன்னாபிசேகத்தில் பங்கேற்றவர்கள், (சாதத்திற்கு அரிசி வழங்கியவர்கள்)முழுமையான அபிசேக கோலத்தில் சிவனை தரிசித்தவர்கள், அபிசேகபிரசாதத்தினை சாப்பிட்டவர்கள் இவர்கள் அனைவரிற்கும் அடுத்த ஒருவருடத்திற்கு உணவிற்கு தட்டுப்பாடு வராது என்பது ஒரு நம்பிக்கையாகும்..

சிலருக்கு செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக்கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது.அல்லது சாப்பிட பிடிக்காது. இதை அன்ன த்வேஷம் என்பார்கள்.இப்படிப்பட்டவர்கள்இ சிவனிற்கு அன்னாபிசேகம் செய்து, அந்த அன்னத்தைஎந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்னத்வேஷம் விலகும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இந்த அன்ன அபிசேகம் எப்படி ஆரம்பித்தது என்பதற்கு ஒரு சரியான சான்றுகிடைக்கவில்லை. இருப்பினும் எது கிடைத்தாலும் முதலில் இறைவனுக்குச்சமர்ப்பணம் செய்கிறோம் அல்லவா? அந்த முறைப்படி ஐப்பசியில் அறுவடையானபுது நெல்லைக் கொண்டு சாதமாகச் செய்துஇ அதை முழுமையாக இறைவனிற்குஅபிசேகம் செய்து நமது நன்றியை இறைவனிற்கு தெரிவிப்பதற்காக இந்த அபிசேகம்ஆரம்பித்திருக்கலாம். சூரிய பகவானிற்கு நன்றி தெரிவிப்பதற்காக தமிழர்பெருமக்கள் உழவர் திருநாளாம் தைத் திருநாளைக் கொண்டாடுவதை நாம்எண்ணிப்பார்க்க வேண்டும். இறைவன் சிவனே சகலத்திற்கும் ஆதாரமானவர்.அதனாலேயே அன்னாபிசேகம் சிவனிற்கு செய்ப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நித்தியஅன்னாபிஷேகம் நடைபெறும். அதை செய்பவர்களும்இ தரிசிப்பவர்களும்அன்னத்துக்குக் கஷ்டப்படாமல் இருப்பது கண்கண்ட உண்மையாகும். அந்தஊருக்கே ‘அன்னம்பாலிக்கும் ஊர்’ என்றே பெயர் வழங்கப்படுகிறது.

அன்னாபிசேகம் செய்யப்படும் ஐப்பசி பௌர்ணமி அன்று பூமிக்கும்சந்திரனிற்கும் இடையேயான கவர்ச்சியினால் அபிசேக அன்னம் ஒரு வகையானநேர்மறையான அதிர்வினைப் பெறுகிறது. இந்த அன்னத்தினை தயிர் கலந்துசாப்பிடும் போது மனிதர்களின் உடலில் ஒரு வகையான புத்துணர்ச்சி பிறக்கிறது.இதுவே அன்னாபிசேகத்தில் அடங்கியிருக்கக் கூடிய விஞ்ஞாண விளக்கமாகும்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here