கொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.

0
6407

சைவத் தமிழ்ச் சங்கம்,  அருள்மிகு சிவன் கோவிலினால் நிர்வாகிக்கப்படும் அன்பே சிவம் அமைப்பின் வருடாந்த வரப்யுர மரம்நடுகைத் திட்டத்தின் ஆரம்பநிகழ்வு முகமாலை சிவபுர வளாகத்தில் 07.11.2017 செவ்வாய்க்கிழமை சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரி, பளை மத்திய கல்லூரி, தர்மக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதீதியாக முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் ந. அனந்தராஜா, அன்பே சிவத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் கு.குமணன் மற்றும்  நிர்வாகத்தினர், தொண்டர்கள் எனப்பலர் கொட்டும் மழையிலும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இங்கு உரையாற்றிய பொ.ஐங்கரநேசன் அவர்கள் இவ் வரப்புயர மரம்நடுகைத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக் கணக்கான மரக்கன்றுகளை வடகிழக்குப் பிரதேசங்களில் நாட்டப்பட்டுள்ளதுடன் எனது அமைச்சின் வருடாந்த மரம்நடுகைத் திட்டங்களுக்கும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை வழங்கியுள்ளமையையும் குறிப்பிட்டார். தொடர்ந்து ந. அனந்தராஜா அவர்கள் கார்த்திகை மாதம் பல ஆயிரக்கணக்கானவர்களை நினைவுகூர்ந்து மரக்கன்றுகள் நாட்டப்படுவதை இன்றைய தினம் நினைவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.  இன்று நடைபெற்ற வரப்புயர மரநடுகைத் திட்டத்திற்கு சுவிசிலிருந்து சைவத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சிவத்திரு.சின்னராஜா இராதாகிருஸ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில்     “வணக்கம் சுவிட்சர்லாந்தில் நாட்டில்  சூரிச் மாநிலத்தில் அருள்மிகு சிவன் கோவிலை பரிபாலனம் செய்யும் சைவத் தமிழ்ச் சங்கமானது அதன் கிளைகளை தாயகம் நோக்கி எம்  உறவுகளுக்கு கைகொடுக்க உருவானதே அன்பே சிவம்,   வரப்புயர மரநடுகை திட்டம்.  அவ்வாறே ஒரு படி மேலே போய் இன்று சிவபுரவளாகம் தோற்றம் காண்கின்றது. இவை அனைத்தும்  எமது தாயகஉறவுகளுக்காகவே  இதில் பயன்பெறுவது நீங்களே; இதன் வளர்ச்சியில்  நீங்களும் இணைந்து செயல்பட  பகிரங்கமாக அன்புக்கரம் நீட்டி சைவத் தமிழ்ச் சங்கம் உங்களை வரவேற்கிறது. இன்று உங்கு செயற்பட்டு வருகின்ற அன்பே சிவம் செயல் வீரர்களுக்கு  என்றும்  நாங்கள்  கடமைப்பட்டுள்ளோம். நாம்  நினைப்பதற்கு செயல் வடிவம் கொடுப்பது நீங்களே, உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு விழா சிறப்புற பார்வதி உடனுரை இலிங்கநாதப் பெருமானின் பாதார விந்தங்களை வணங்கி நிற்கின்றேன்.”  தலைவர்.சின்னராசா இராதாகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here