சைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவிலினால் தாயகத்தில் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், முதலியார்குளம், முகத்தான்குளம் போன்ற இடங்களில் வாழும் சில சைவத் தமிழ் மக்களின் மதமாற்றத்தையும், மனமாற்றத்தையும் தடுத்து, மனங்களில் சைவத்தின் எழிச்சியை காட்டும் முகமாக வீடுகள், கோவில்கள், பொது இடங்களில் ஏற்றுவதற்காக ஆயிரம் நந்திக் கொடிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கீழே மறவன்புலவு சிவத்திரு. க.சச்சிதானந்தம் ஐயாவின் செய்தி தொகுப்பு
கார்த்திகை 3இ 2048 (19.11.2017) ஞாயிறு
…பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே….. (திருவெம்பாவை)
ஒவ்வொரு வீட்டிற்கும் செல்கிறார்.
துன்பம் போக்கி இன்பம் தருகிறார்.
இடப் பாகத்தில் உமையோடு செல்கிறார்.
வவுனியா மாவட்டம்
செட்டிகுளம் வட்டம்
முகத்தான்குளம் நிலதாரி அலகு.
அங்கே 156 சைவக் குடும்பங்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் நந்திக்கொடி ஏற்றினோம்.
பொது இடங்கள் 3இல் நந்திக்கொடி
அவற்றுள் ஒன்று 60 அடி உயரத்தில்.
சைவத்தையும் தமிழையும் காக்கும் வேட்பாளருக்கே
சைவ வாக்காளர் வாக்களிக்கக் கோரிச் சுவரொட்டிகள் 100 ஒட்டினோம்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்