ஐப்பசி மாதத்து அமாவாசையை அடுத்து அதாவது வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சட்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வணங்கி நோற்கும் விரதம் கந்தசட்டி ஆகும்.
செல்வங்கள்இ சுகபோகங்கள்இ நற்புத்திரப் பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ இஷ்ட தெய்வமாகவோஇ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுட்டிப்பர். தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம்.
இவ்வுத்தகம முறைமையை அதுசரிக்க இயலாதவர் ஐந்து தினங்கள் ஒரு வேளை உண்ணுதலும் ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது.
அமாவாசை தினத்தில் ஒரு வேளை உணவுண்ணல் தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து “காப்புக் கட்டல்” அதாவது சங்கற்பம் செய்தல் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறை வழிபாடுஇ புராணப் படனம்இ போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடல்.
இறுதிநாளில் காப்பை அவிழ்த்து தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பித்தல்.
ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றிஇ பாரணைப் பூஜை முடிவுற்றதும் மாகேசுர பூஜை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்தல் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகும்.
கந்தசட்டி என்பது முருகப் பெருமான் சூரங்களும் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும். இவ்விரதத்தின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் “சூரன் போர்” என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுதல் வழக்கம். மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம்இ வெகுளிஇ ஈயாமைஇ (உலோபம்) மயக்கம்இ செருக்குஇ பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்தசட்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்