சிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 30.03.2018

0
3658

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவிலின் அன்பே சிவம் அமைப்பினால் பராமரிக்கப்படும் சிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான  அடிக்கல் நாட்டு விழா 30.03.2018 வெள்ளிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் கௌரவ நீதியரசர் சி.வி விக்கினேஸ்வரன் சிறப்பு அதீதியாக கலந்துகொண்டார். அத்துடன் கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அன்பே சிவம் இணைப்பாளர்கள், தொண்டர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய மேன்மைமிகு முதலமைச்சர் அவர்கள் அன்பே சிவம் அமைப்பானது இதுவரை எமது தாயகப் பகுதிகளில் பல உதவித்திட்டங்களை வழங்கி மக்கள் மனதில் மனதில் இடம்பிடித்துள்ளார்கள் எனவும் தொடர்ந்து வரும் காலங்களில் அது மேன்மேலும் இரட்டிப்பாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை எனக் கூறியதுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here