கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்!

0
5764

கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்!

சுவிற்சர்லாந்தில்கடந்த ஆண்டு 23 கோவில்களை ஒருங்கிணைத்து இந்து சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம்அனைத்து கோவில்களும் பொது அமைப்பாக சுவிற்சர்லாந்தில்சைவத் தமிழ்மக்களின் ஒற்றுமையினை வலுப்படுத்துவதும், சுவிஸ்வாழ் சைவர்களது தேவைகளை சுவிஸ் அரசிற்கும் சமூகத்திற்கும் ஒருமித்த குரலாக வலிமையுடன் எடுத்து விளக்கி, சுவிற்சர்லாந்து சட்டத்தில் உள்ளபடி சமய சுதந்திரத்துடன் நாம்எமது அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வழிசெய்வதாகும்.

உலகெங்கிலும்நாம் பரந்து வாழ்ந்தாலும் இன்றுவரையும் உலகம் எம்மை எமது இனம், மொழி, சமயம் சார்ந்தே விழிக்கிறது. ஆகவே பெரும்பாலான தமிழர்கள்நாம் இன்று சுவிற்சர்லாந்தில் அனைத்து உரிமைகளைப் பெற்று குடியுரிமையுடன் வாழ்ந்தாலும், ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களாகவே நோக்கப்படுகிறோம்.

இவ்வகையில் புலம்பெயர் தமிழர்களது பணிகள் முற்றுப்பெறவில்லை! கடந்தகாலத்தில் இருந்து கற்றுக்கொண்டு, இங்கு புலம்பெயர்நாடுகளில் அதை நெறிப்படுத்தி அடுத்தஇளந்தமிழ்ச் சமூகத்திடம் ஆவணப்படுத்தி எமது இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் கையளிக்க வேண்டிய பொறுப்பும் அத்துடன் தாயகத்து தமிழர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவவேண்டிய தார்மீகப்பொறுப்பும் என இரட்டிப்புச் சுமைஎமக்குண்டு.

நாம்கடந்த காலத்தை திரும்பநோக்கின் 80களில் ஈழத்தமிழர்கள் நாம் தாயகத்தில் இருந்துஉலகெலாம் புலம்பெயர்ந்து ஐரோப்பா நாடுகளை வந்தடையும்போது, எம்முடன் நாம் எடுத்துவந்தபொருள் எமது இனம், மொழி, சமயமாகும். அக்காலத்தில் பண்பாட்டு அதிர்ச்சியுடனும் அக-புற சவால்களுடன்தமிழர்கள் ஐரோப்பாவில் போராடவேண்டி இருந்தது. எமது மொழி, சமயம், பண்பாடு என்பது இங்கு வாய்ப்பதற்கும் வாழ்வதற்கும் ஏற்ற சூழல் அப்போதுபெருவாரியான ஐரோப்பிய நாடுகளில் நிலவவில்லை. எமது தாயகத்திற்குப் புறம்பானவெளிச்சூழலில் கடுமையான பனியிலும், குளிரிலும் உழைத்தும், முரணான பண்பாட்டுச்சூழலில் இசைவுகண்டு மிகக் கடுமையாகப் போராடி இன்று அடிப்படைத்தேவைகளையும், விருப்புத் தேவைகளையும் நிறைவுசெய்து அதைத்தாண்டியும் பயணிக்கின்றோம்.

போர்க்காலத்திலும்சரி, இன்று முடக்கப்பட்ட காலத்திலும் சரி புலம் பெயர்தமிழ்ச் சமூகம் கடுமையாகவே தாயகத்திற்காகவும், தாம் வாழும் நாடுகளில்எமது இனம், மொழி, சமயம், பண்பாட்டினை வாழவைக்க கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறது. ஆயுதரீதியான ஈழவிடுதலைப்போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலம் விட்டுச்சென்ற இடைவெளி புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் மேலும் சவால்களை அதிகரித்து சமூகப்புறச்சூழலை கடினமாக்கி உள்ளது என்பது இப்போது உணரப்படுகிறது.

நாங்கள்வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு சட்டமுறைஉள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்மக்களதுமன்றங்கள் இலாபநோக்கற்ற, அரசியல் நோக்கற்ற, சமய நோக்கற்ற எனும்பல்வேறு நோக்குகளில் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கேற்ப நிறுவப்பட்டு, பொது யாப்பு இயற்றப்பட்டுஇயங்குகின்றன. ஒரு மன்றம் இயங்குவதற்கும்அது தனது நோக்கத்தை வாழ்ந்துஅதனை பொதுச்சமூகத்திற்கு அளிக்க கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இவ்வாறே கோவில் மன்றங்களும் அமைந்துள்ளது. எமது ஒன்றியத்தில் உறுப்பினராகஉள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் இது பொருந்தும். பலஇலட்சக்கணக்கான பல மணிநேர பலஆயிரம் தமிழர்களின் உழைப்பின் பெறுபேறே ஒரு மன்றம் ஆகும். இராப்பகலாக உணவின்றி உறக்கம் இன்றி பொதுநோக்கில் உழைக்கும் உள்ளங்கள் ஆயிரம். இத்தனை தொண்டர்களும் பொதுப்பணியை விடுத்து வேலைக்குச் சென்றால் இன்னும் அதிகம் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திஇருப்பர். இவர்கள் தமது நேரத்தையும் பொருளையும்மன்றங்களுக்கு கொடையாக அளித்தே மன்றத்தின் நோக்கம் நிறைவேற ஆணிவேராக உழைக்கிறார்கள்.

சுவிசில்மட்டுமல்ல ஈழத்திற்கு வெளியில் ஈழத்தமிழர்கள் உருவாக்கிய அனைத்து தமிழ் அமைப்புக்களும் எமது இனத்திற்கும், மொழிக்கும், சமயத்திற்கும், பண்பாட்டிற்கும் நிறைந்த பணியாற்றிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக சைவத்திருக்கோவில்கள் சமூக நடுவமாகவே இயங்குகின்றன. இயந்திரமயமான வாழ்வில் சற்று ஓய்வினை வழங்கி, உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் சமூகக்கூடமாகவும், இன- மொழி வளர்க்கும்திடலாகவும், பண்பாட்டு ஆடைகளை அணிந்து பண்பாடு கடத்தப்படும் முற்றமாகவும் கோவில்கள் விளங்குகின்றன. ஒரே மொழியை ஒருஇடத்தில் பேசி நட்பும் உறவும்வளர்க்கும் சமூக நிலையமாகவும் கோவில்கள்அமைந்துள்ளன. ஆகவே இங்கு தொண்டாற்றும்அனைவரது உழைப்பும் விலைகொடுத்து வாங்கக்கூடிய பொருளல்ல.

இப்படிஉழைக்கும் அனைவரும் மனிதர்களே!, எப்படி ஒரு குடும்பத்தில் எப்போதும்ஒரு கருத்து நிலவமுடியாதோ அதுபோல் பொது அமைப்புக்களிடையிலும் பல கருத்துஒரு முரண்பாடாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. அப்படி முரண்பாடு ஏற்பட்டால் அது ஒப்பந்தம் மூலம்தீர்வுகாணப்படலாம். அல்லது அனைத்துத் தரப்பும் பதவிகளுக்கு பதிலாக பொது நலன்களை முன்னிலைப்படுத்திமுரண்பாடுகளைக் கழையலாம். இல்லாவிட்டால் முரண்பாடுகள் உள்ள தரப்புக்கள் வெளிப்படைத்தன்மையுடன்பக்கம் சாராத மூன்றாம் தரப்பினை அணுகி தீர்வு காண முனைப்பினைக் காட்டலாம்.

இந்துசைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் எப்போதும் அடியார்கள் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்களை அறியவும், முரண் ஏற்படின் தன்னார்வத்துடன் இருதரப்பின் ஏற்புடன், வெளிப்படைத்தன்மையுடன் இரகசியத்தன்மை காத்து இணக்கப்பாடு எட்டவும், முரண்களைக் களையவும் உழைக்க முன்னிற்கும்.

இதுஇப்படி இருக்க கடந்த சில வாரங்களில் ஒருகோவில் மன்றத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினை சமய நம்பிக்கை அற்றவர்களும், அதுபோல் உள்நோக்கம் கொண்ட அரசியற் தன்மையுடன் அணுகுவோரும் தமது கருப்பொருளாக்கி ஒட்டுமொத்தகோவில்களையும் சாடுவது பொருத்தமற்ற செயல் என நாம் கண்டிக்கிறோம்.

தாயகத்தில்இருந்து வேருடன் கொய்யப்பட்டு ஐரோப்பிய மண்ணில் விதைக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் அதிக வலியுடன் உழைத்துதாய்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் எமது இனத்திற்கும், மொழிக்கும், சமயத்திற்கும் பெரும் பணிசெய்து வருகிறோம். இந்நிலையில் தனிமனித அபிமானங்களாலும், பிரச்சனையை ஊதிப்பெருக்கி அதில் நலன் அடைய முனையும்சிலராலும் பலரது உழைப்பு மழுங்கடிக்கப்படுவதுடன் தமிழர்கள் தமது உழைப்பில் கட்டியெழுப்பியஅமைப்புக்கள் சிதறடிக்கப்படுவதும், தமிழர்கள் சொத்து சேதப்படுத்தப்படுவதையும் நாம் வன்மையாக இத்தால்கண்டிக்கிறோம்.

உண்மையானஅக்கறை உள்ளவர்கள் முரண்பாடுகளின் ஆணிவேரைக் களைய முன்வந்து உழைக்கவேண்டும். பொறுப்புள்ள ஆர்வலர்கள் பொறுப்புடன் நடந்துகொண்டு, சமூகவலைத்தளங்களில் சமூகத்திற்கு நலன் அளிக்காத தகவல்களையும், காணொளிகளையும் பரப்புவதையும் பதிவிடுவதையும் என்றும் தவிர்க்க வேண்டும். பொது இடத்தில் எச்சூழலிலும்எவரும் தனிமனிதத்தாக்குதல்களை தவிர்த்து, சபைநாகரீகத்துடன் உரையாடும் சூழலும் காக்கப்படவேண்டும். எப்போதும் பொதுவாக அனைத்தையும் எடுத்த எடுப்பில் சாடுவதையும் தவிர்க்க வேண்டும் எனும் கோரிக்கைகளினையும் இங்கு முன்வைக்கிறோம்.

எரியும்வீட்டை எரிபொருள்கொண்டு அணைக்கமுடியாது. நெருப்பை எரிபொருள்கொண்டு அணைப்பது அறிவில் சிறந்த செயலும் அல்ல. இதனையே சில செய்திகளும் எழுத்துக்களும்கடந்த நாட்களில் செய்திருக்கின்றன.

சுருங்கிப்போகும்விரைவான இவ்வுலகில் சமூகவலைத்தளங்களும், தமிழ் ஊடகங்களும் நாம் எமது மொழியையும்சமயத்தினையும் அடுத்த இளந்தமிழ்ச் சமூகத்திற்கு கடத்துவதற்கு பெரும் பங்களிப்பு நல்கின்றன. அதேநேரம் தவறான குற்றங்கள் சுமத்தப்பட்டு பொதுப்பழி அனைத்துக் கோவில் மன்றங்கள் மீது சுமத்தப்படும்போது அவை எவருக்கும்நன்மை பயற்காது எதிர்மறையான கேடான விளைவினையே அளிக்கின்றன. இப்படி எமது இனத்தை, மொழியை, சமயத்தை வலிமை இழக்கச் செய்யும் படைப்புக்களையும், செய்திகளையும் தமிழ் ஊடகங்களும், தமிழ் எழுத்தாளர்களும் தவிர்த்து தமிழ் இனத்தின், மொழியின், சமயத்தின்மீது உண்மையான அக்கறையுடன் அணுகி நல் எழுத்துக்களாலும், படைப்புக்களாலும் சிக்கல்களுக்குத்தீர்வுகாண முன்வருமாறு அன்புடன் அழைத்து நிறைகிறோம்.

உண்மையுடன்

சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார்

தலைவர்

சின்னராசாஇராதாகிருஷ்ணன்

செயலாளர்

இந்துசைவத்திருக்கோவில்களின்ஒன்றியம் சுவிற்சர்லாந்து, 11. 10. 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here