சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம்.

அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம்.

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது.

அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு . திருமதி . திருநாவுக்கரசு தம்பதிகளின் செல்வப் புதல்வன் பார்த்தன் பிறந்த தினத்தின் (21.07.2021) நற்சேவையாக இன்றைய நாளில் அவர்களின் அன்புக்கரம் கொண்டு வவுனியா மாவட்டத்தில் கல்மடு பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலையில் வைத்து பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது கற்றல் உபகரணங்களும் மதிய உணவு பொதியும் அன்பே சிவம் இளம் தொண்டர்கள் வழங்கி உதவினர்.

இவ் அன்புகரம் கொடுக்கும் திட்டத்தில் உலர் உணவைப் பொருட்களை பெற்று பயன் பெற்ற பெற்றுக் கொண்ட மாணவர்கள் , கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிகள்,மற்றும் மக்கள், அன்பே சிவம் இணைப்பாளர் மற்றும் இளம் தொண்டர்கள் திரு . திருமதி . திருநாவுக்கரசு தம்பதிகளின் செல்வப் புதல்வன் பார்த்தன் அவர்கள் எல்லா செல்வமும் பெற்று நீடுவாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரித்ததுடன் அத்துடன் திரு . திருமதி . திருநாவுக்கரசு குடும்பத்தினர் எல்லாம் வல்ல சூரிச் அருள்மிகு சிவன் கோயில் சிவபெருமானின் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தி நன்றிகளையும் தெரிவித்த்தனர்.

அத்துடன் தாயகமக்களின் தேவைகளை அறிந்து தொடர்ச்சியாக உதவிகள் செய்து வரும் அன்பே சிவம் குழமத்திற்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

31.07.2021
அன்பே சிவம் .
நன்றி.

மொழியை மாற்ற »