.ஆடியமாவாசை விரதம் – 08.08.2021
ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாகஇ அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது.
ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து நீர் நிலைகள், ஆறு, கடல் போன்ற இடங்களில் குளித்து, பித்ருக்களை வரவேற்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெற்று, காக்கைக்கும் உணவு வைத்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில் அவ்வாண்டு அருள்மிகு சிவன் கோவிலில் ஆடித்திங்கள் 24ம் நாள் (08.08.2021) ஞாயிற்றுக்கிழமை விரதமிருக்கும் அடியவர்கள் ஆத்மசாந்தி பூசையுடன் தானம் கொடுத்து நெய்விளக்கேற்றி அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
ஆலயம் காலை 9.00 மணிமுதல் இரவு 21.00 மணிவரை திறந்து இருக்கும்.

சிவனடியார்களே!
நிகழும் சர்வமங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052 பிலவ வருடம் ஆடித்திங்கள் 26ம் நாள் (10.08.2021) செவ்வாய்க்கிழமை சக்திவிரதங்களுள் சிறப்பானதொன்றாக விளங்கும் ஆடிப்பூரவிரத தினம் எமதாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கைக்கூடியுள்ளது.
இவ்விரத தினத்தன்று அடியார்கள் வருகைதந்து நடைபெறும் அபிசேகம், பூசை, திருவிழா என்பனவற்றில் கலந்து கொண்டு அம்பாளை தரிசிப்பதோடு எமது தாயக விடிவிற்கும் பிரார்திப்போமாக.
ஆடிப்பூர தினத்தன்று (10.08.2021 செவ்வாய்க்கிழமை)
மாலை 17.00 மணிக்கு – பார்வதி அம்பாளுக்கு அபிசேகம்.
இரவு 18.00 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேடபூசை.
இரவு 19.30 மணிக்கு – பார்வதி அம்பாளுக்கு ருது சாந்தி வைபவம்
நடைபெற்று விசேடபூசையினைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து இறைபிரசாதம் வழங்கப்படும்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்