ஆடி அமாவாசை விரதம் 15.08.2023 செவ்வாய்க்கிழமை
சைவசமய விரதங்களில் எம் மூதாதையர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக வழிபடும் சிறப்பு நாட்களில் ஆடி அமாவாசை விரதம் பிரதானமானது. இவ்விரதம் தந்தையை இழந்த அடியார்கள் தந்தையின் ஆன்ம ஈடேற்றத்திற்காக மேற்கொள்ளும் விரதமாகும். இவ்விரத நாளில் நாம் எமக்காக தங்களை ஆகுதியாக்கிய அனைத்து தந்தையர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் வழிபடுவோம்.
இவ்விரத நாளிளன்று காலை 9.00 மணிமுதல் இரவு 21:00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.
காலைப்பூசை 09:00 மணி
மூலவர் விசேட அபிசேகம் 11:30 மணி
மதியப் பூசை 12:00 மணி
இரவுப் பூசை 19:00 மணி
மதியப் பூசையைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
பூசைக்குரிய பொருட்களையும் அன்னதானப் பொருட்களையும் ஆலயத்தில் ஒப்படைக்கலாம்.