சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

சித்திரை புத்தாண்டு விசேட வழிபாடு

சித்திரை புத்தாண்டு விசேட வழிபாடு

சிவனடியார்களே!

மலரவிருக்கும் மங்களகரமான குரோதி எனும் பெயர்கொண்ட புதுவருட சிறப்புப்பூசை வழிபாடுகள் திருவள்ளுவர் ஆண்டு 2055. சித்திரைத் திங்கள் 1ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இங்கநாதப் பரமே- ச்சுரப் பெருமான் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. நாமும் எம் தாயக மக்களும் இன்புற்று வாழ எம்பெருமான் அருள்வேண்டி இத்திருநாளில் வணங்குவோம்.

விஷு புண்ணிய காலம்

13.04.2024 சனிக்கிழமை மதியம் 12:45 முதல் 20:45 வரை

குரோதி வருடப்பிறப்பு 13.04.2024

பூசை நேரம்

13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 16.45 மணிக்கு வருடப்பிறப்பு பூசை

காலை 9.00 மணிக்கு காலைப்பூசை மதியம் 12.00 மணிக்கு மதியப்பூசை இரவு 7.00 மணிக்கு இரவுப் பூசை

ஆலயம் காலை 09.00 மணிமுதல் இரவு 21.00 மணிவரை திறந்திருக்கும்

சங்கிரம தோச நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், திருவாதிரை, புநர்பூசம் 1ம், 2ம், 3ம் கால்கள் சித்திரை, விசாகம், 4ம் கால்கள் அனுசம், கேட்டை, அவிட்டம்

ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து நீராடி இயன்ற தான தர்மங்களைச் செய்து சங்கிரமதோசத்தை நிவர்தி செய்யக்கடவர்.

கைவிசேட சிறப்பு நேரம்

13.04.2024 சனிக்கிழமை மாலை 17.13 முதல் 18.50 வரை

மருத்துநீர் 12.04.2024 வெள்ளிக்கிமை காலை 10:00 மணிமுதல் வழங்கப்படுமனம்.

சிவனடியார்கள் அனைவருக்கும் சைவத் தமிழ்ச் சங்கத்தின்
இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”

🌐 மொழியை மாற்ற »