சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

சனீச்சுர விரதம்

சனீச்சுர விரதம்

எம்பெருமான் அடியார்களே!
நவக்கிரகங்களுள் சாயாக்கிரகம் என்று பெயர் பெற்று, அவர் சஞ்சாரம் செய்யும் இராசிக்கமைய அடியார்களுக்கு சுப, அசுப பலன்களை வழங்கி அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுதல் சாலச்சிறந்தது. ஆயினும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் அவருக்கு உகந்தவை. இத்தினங்களில் அடியார்கள் விரதமிருந்து, சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணை தீபமேற்றி, கருநீல மலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளுச் சாதம் நைவேதனம் செய்து, சிவ வழிபாடு செய்து வர சனீஸ்வர தோஷம் நீங்கப்பெற்று மகிழ்வோடு வாழ்வார்கள். இவ்வருடம் புரட்டாதி மாதத்தில நான்கு சனிக்கிழமைகள் வருகின்றன. (23.09.2023), (30.09.2023), (07.10.2023), (14.10.2023) ஆகிய சனிக்கிழமைகளில் சிவனாலயத்தில் விசேட சனீஸ்வர பூசை வழிபாடுகள் நடைபெற உள்ளது. இத்தினங்களில் அடியார்கள் வருகைதந்து சனீஸ்வர தோஷ பரிகாரம் செய்து சிவவழிபாடு செய்து சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று மகிழ்வோடு வாழ்வீர்களாக.

சனீஸ்வர மகாஹோமம்

  • (23.09.2023), (30.09.2023), (07.10.2023), (14.10.2023) ஆகிய சனிக்கிழமைகளில் காலை 10.00 மணிக்கு சனீஸ்வர மகாஹோமம் நடைபெறும். அடியார்கள் நடைபெறும் ஹோமத்தில் உங்கள் பெயர் நட்சத்திரங்களைக் கூறி சனிபகவானுக்கு உகந்த எள்ளு, சமித்து, பட்டு, எள்ளுச்சாதம், வெற்றிலை, பழம், கருநீலப்பூக்கள் என்பனவற்றை ஆகுதியாக வழங்கி சனீஸ்வர தோஷம் நீங்கி மகிழ்வோடு வாழ்வீர்களாக.

 

சனீஸ்வரவிரத பூசை நேரம்

காலை 9.00 மணிக்கு காலை பூசை.
காலை 10.00 மணிக்கு சனீஸ்வர மகாஹோமம் நடைபெறும்;.
மதியம் 11.00 மணிக்கு சனீஸ்வரப் பெருமானுக்கு விசேட அபிசேகமும், அடியார்கள் தோஷம் நீங்க நீர் ஊற்றுதல்.
நண்பகல் 12.15 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு மதியப்பூசை இரவு 19.00 மணிக்கு இரவுப் பூசை.

இவ்வருடம் சனீஸ்வரப்பெருமான் மகரம்,கும்பராசியில் சஞ்சாரம் செய்வதனால் உத்திராடம் 2ம்,3ம்,4ம் கால்கள் திருவோணம், அவிட்டம் 1ம்,2ம் கால்கள் மகரராசி அவிட்டம் 3ம்,4ம் கால்கள், சதயம் பூரட்டாதி 1ம்,2ம்,3ம் கால்கள் கும்பராசி புரட்டாதி4ம் கால் உத்திரட்டாதி ரேவதி மீனராசி ஆகியவை ஏழரைச்சனியும் மிருகசீரிடம் 3ம்>4ம் கால்கள் திருவாதிரை புனர்பூசம்1ம்,2ம்,3ம்,4ம் கால்கள் மிதுனராசியும்; ஆயிலியம் புனர்பூசம் 4ம்கால் பூசம். ஆயிலியம் கர்க்கடக ராசி ஆகியவை அட்டமத்துச்சனியும் மகம், பூசம், உத்தரம் 1ம் கால் சிங்கராசி 1ம் இடத்துச்சனியும் சித்திரை 3ம்,4ம் கால்கள் சுவாதி விசாகம் 1ம்,2ம்,3ம் கால்கள் துலாம் ராசி அத்தாஷ;தமச்சனி (4ம்இடம்) விசாகம் 4ம்கால், அனுசம், கேட்டை விருட்சிகராசி அத்தாமச்சனி (4ம்இடம்) இந்த இராசியில் பிறந்த அடியார்கள் சனீஸ்வர விரதம் இருந்து எள்தீபம் ஏற்றி வழிபடுவது மிகச்சிறப்பு

🌐 மொழியை மாற்ற »