சிவனடியார்களே ! மலரவிருக்கும் மங்களகரமான சுபகிருது எனும் பெயர் கொண்ட புதுவருட சிறப்புப் பூசை வழிபாடுகள் திருவள்ளுவர் ஆகண்டு 2053இ சித்திரைத் திங்கள் 01 நாள் (14.04.2022 வியாழக்கிழமை) இலிங்கநாதப் பரமேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது . நாமும் எம் தாயக மக்களும் தற்போதுள்ள அசாதாரண சூழல் நீங்கி இன்புற்று வாழ எம்பெருமானை வேண்டி அருள்பெற்றுய்யும் வேண்டிக் கொள்கின்றோம் .
- விஷு புண்ணிய காலம் 14.04-2022 வியாழன் அதிகாலை 0.20 முதல் 8.20 வரை.
- சுபகிருது வருடப்பிறப்பு 14.04.2023 வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு.
பூசை நேரம் 14.04.2022 வியாழக்கிழமை
- அதிகாலை 4.30 மணிக்கு வருடப்பிறப்பு பூசை
- காலைப்பூசை 9.00 மணிக்கு
- மதியப்பூசை 12.00 மணிக்கு
- இரவுப் பூசை 19.00 மணிக்கு
சங்கிரம தோச நட்சத்திரங்கள் பரணி, மகம், பூரம், உத்தரம் 1 ம் கால் பூராடம், உத்தராடம் 2 ம், 3 ம் கால்கள் திருவோணம், அவிட்டம் 1 ம் . 2 ம் கால்கள் இவற்றிற் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோசத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
கைவிசேட சிறப்பு நேரம் 14.04.2022 வியாழன் காலை 8.00 – 8.30 வரை மதியம் 13.00 – 12.30 வரை மாலை 5.00-6.00 மணி வரை
மருத்து நீர் 13.04.2022 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் வழங்கப்படும்
சிவனடியார்கள் அனைவருக்கும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்