சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

சிவபுரம் – கிளாட்புறுக்

சிவபுரம் – கிளாட்புறுக்

 

சிவனடியார்களே,

ஐரோப்பாவின் இதயப்பகுதியென போற்றப்படும் சுவிற்சர்லாந்து நாட்டில் வர்த்தக நகரமான சூரிச் நகரில், சர்வதேச விமானநிலையத்திற்கு அருகாமையில் கோபுரத்துடன் திருக்கோவில் அமைக்கும் திருப்பணியினை ஆரம்பிக்க வழிகாட்டி அருள்செய்யும் சிவபெருமானை வணங்கி திருக்கொடைதந்து திருத்தொண்டாற்ற வழிசமைத்த உங்களை பூமிபூசைக்கு அழைப்பதில் மனநிறைவடைகிறோம்.

நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2055, சோபகிருது வருடம், பங்குனித் திங்கள் 11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) பூரணைத் திதியும் உத்தர நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய மங்களத் திருநாளில் காலை 09.30 மணிமுதல் 11.02 மணிவரையுள்ள திருநல்வேளையில் பூமிபூசை நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

எம்பெருமான் திருக்கோவில் அமைக்கும் சிவபுரம் கிளாட்புறுக் திருப்பணியில் அனைத்து அடியார்களும் சிவபுரம் கிளாட்புறுக் பூமிபூசையில் பங்கேற்பதற்கேற்றவாறு மூன்று நாட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வில் தங்கள் வசதிக்கேற்ப பூசை, யாகம், மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருமுறை முற்றோதல் போன்றவற்றில் பங்குபறுவதுடன் தங்கள் கரங்களால் திருக்கோவில் கட்டுவதற்கான விசேட பூசையில் வைக்கப்பட்ட திருக்கல்லினையும் எடுத்துக்கொடுத்து தலைமுறைகள் கடந்து பலநூறாண்டு நிலைத்திருக்கப்போகும் திருக்கோவில் பூமிபூசையில் இணைந்து இறையருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம 

22.03.2024 வெள்ளிக்கிழமை காலை 09:00 மணி:

விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி தேவதா அனுக்ஞை, கணபதி கோமம், வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹனம், மதியப் பூசை, இறை பிரசாதம் வழங்கல்.

மாலை 17:00 மணி:

மாலைப் பூசை, ஆச்சார்ய அழைப்பு, திருக்கும்ப அலங்காரம், யாகபூசை, மகாசிவயாகம், வேதபாராயணம், பஞ்சபுராணம் ஓதுதல், இறை பிரசாதம் வழங்கல்.

(அடியார்கள் 19:00 மணிமுதல் 21:00 மணிவரை யாகத்தில் ஆகுதியிட்டு திருக்கோவிலுக்கான திருக்கல்லினையும் தங்கள் கைகளால் வழங்கலாம்)

23.03.2024 சனிக்கிழமை காலை 09:00 மணி:

காலைப் பூசை, யாக பூசை, மகா பூமி ஹோமம், வேத பாராயணம், பஞ்சபுராணம் ஓதுதல், இறைபிரசாதம் வழங்கல்.

(அடியார்கள் 10:00 மணிமுதல் 01:30 மணிவரை யாகத்தில் ஆகுதியிட்டு திருக்கோவிலுக்கான திருக்கல்லினையும் தங்கள் கைகளால் வழங்கலாம்)

மாலை 17:00 மணி:

மாலைப் பூசை, யாக பூசை, மகா இலட்சுமி யாகம், வேதபாராயணம். பஞ்சபுராணம் ஓதுதல். இறைபிரசாதம் வழங்கல்.

(அடியார்கள் 19:00 மணிமுதல் 21:00 மணிவரை யாகத்தில் ஆகுதியிட்டு திருக்கோவிலுக்கான திருக்கல்லினையும் தங்கள் கைகளால் வழங்கலாம்)

24.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி:

காலைப் பூசை, யாக பூசை, மகாபூர்ணாகுதி, தீபாராதனை. வேதபாராயணம், திருமுறை ஓதுதல், கலச அபிசேகம் நடைபெற்று விசேட பூசை. இறைபிரசாதம் வழங்கல்.

(அடியார்கள் 11:00 மணிமுதல் 21:00 மணிவரை யாகத்தில் ஆகுதியிட்டு திருக்கோவிலுக்கான திருக்கல்லினை தங்கள் கைகளால் வழங்கலாம்)

22.03.24 வெள்ளி காலை முதல் 24.03.24 ஞாயிறு மாலைவரை நடைபெறும் திருவாசக முற்றோதலிலும் திருமுறைப் பாராயணத்திலும் பங்குபற்றி இறையருள்பெற அனைவரையும் அழைக்கிறோம்.

🌐 மொழியை மாற்ற »