சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

அன்பே சிவம்

சைவத் தமிழ்ச் சங்கமும் அன்பே சிவமும்

ஓம் நமசிவாய

சைவத் தமிழ்ச் சங்கமும் அன்பே சிவமும்

  தாயக மக்கள் சொல்லொனாத் துயரங்களாலும் பல்வேறு இன்னல்களாலும் தம் தாயக மண்ணை விட்டு வௌ;வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த காலங்களில் சுவிஸ் நாட்டில் தஞ்சம்புகுந்து எமது உறவுகள் சைவமும் தமிழும் நலிவடைந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவை அழியாமல் காக்கவும்ää எமது கலை கலாச்சாரங்களை பேணவேண்டுமென்றும் தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு உதவவேண்டுமென்ற நோக்கோடும் 1994ம் ஆண்டு சைவத் தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட  சிவன் கோவில் ஆற்றும் பணிகளும்ää சேவைகளும் அளப்பரியது. புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் பரந்துவிரிந்து இன்றுவரை அதன் செயற்பாடுகள் வளர்ச்சிப் பாதையிலே சென்றுகொண்டிருக்கின்றது. 

தாயகத்தில் இயற்கை அனர்த்தங்கள்ää போரால் ஏற்பட்ட பாதிப்புக்களின் போது 1995 – 2009 காலப்பகுதிகளில் தாயகத்தில் உள்ள எம் உறவுகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து வந்தோம். 2009இல் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபோது எம்தேசம் சுடுகாடாக்கப்பட்டு தமிழர் இருப்பே வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி வீசப்பட்டு உலகில் எங்குமே நடந்திராத பேரவலங்கள் நடந்தேறிக் கொண்டிருந்தது. உயிரிழப்புக்கள்ää சொத்திழப்புக்கள்ää காணாமற்போனோர்ää அங்கங்களை இழந்தவர்கள்ää விழுப்புண் அடைந்தோர்ää உண்ண உணவின்றி உடுக்க உடையின்றிää இருக்க இடமின்றி என அனைத்து துயரங்களினாலும் சீரழிந்து சின்னாபின்னமாக்கப்பட்டு எம்மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 

இந்நிலையில் எம் தாயக உறவுகள் படும்துன்பங்கள் கண்டு புலம்பெயர்தேச உறவுகள் திகைத்து நின்றார்கள். மனதில் பல வேதனைகளோடும் ஆதங்கங்களோடும் துன்பப்படும் எமது மக்களை அடுத்த கட்டத்திற்கு மீட்டுச்செல்ல வேண்டுமென்ற நோக்கோடு சைவத் தமிழ்ச் சங்கத்தினால் விசேட கூட்டங்கள் கூட்டப்பட்டு தாயகத்து மக்களின் நிலைமைகளை தீவிரமாக ஆராய்ந்த பின் மக்களின் உடனடித் தேவையான உணவு வழங்கப்படல் வேண்டும் எனும் தீர்மானத்திற்கு அமைவாக நாம் துரிதமாக வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருந்தோம். அவ்வேளையில் போர் அவலத்தை சந்தித்த எம் உறவுகள் வவுனியா மாவட்டத்தில் பல இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எமது ஆலய நிர்வாகம் வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முகாம்களில் இருந்த மக்களில் ஒரு தொகுதியினரிற்கு ஒருமாத காலமாக உணவுகளை வழங்கிவந்தோம். ஆனால் அங்கிருந்த மக்களின் தேவைகளோ அதிகம்.

 

இதில் வவுனியா கோவில் பற்றுச்சீட்டை இணைக்கலாமா?

 

இக்காலப்பகுதியில் சைவத் தமிழ்ச் சங்க தொண்டர்கள் அனைவரும் ஒன்றுகூடி தாயகத்தில் இம்மக்களின் நிலமைகள் துன்பங்கள் சம்பந்தமாக தொடர்பாகவும்ää இவர்களுக்கு நாம் எவ்வாறு உதவமுடியும் என்பது தொடர்பாகவும் ஆராந்திருந்தோம். எமக்கு கிடைத்த தொடர்புகளுக்கு அமைய வடமராட்சிகிழக்கு மணற்காடு இடைத்தங்கல் முகாமில் அடிப்படை வசதிகள் அற்றநிலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவிபுரியக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. முதற்கட்டமாக இங்கிருந்த மாணவர்களில் கற்றலுக்கான நிதியுதவி தேவையாகவிருந்த 60 பாடசாலை மாணவர்கள் இனம்காணப்பட்டு மாதாந்த உதவித்தொகையாக 1000 ரூபா வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் முகாமிலிருந்த வயோதிபர்களுக்கான சத்துணவும் வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டது. 

 

இவ்வேலைத்திட்டத்தினை தாயகத்தில் சைவத் தமிழ்ச் சங்கம் நேரடியாக மேற்கொள்ள சில தொண்டு உள்ளம்கொண்ட நபர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தோம்.  அவர்களின் உதவியோடு ‘மண்சுமந்த மேனியர்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. மண்சுமந்த மேனியர் தொண்டர்களின்  உதவியுடன் வல்வெட்டித்துறை சிவகுரு மகாவித்தியாலய அதிபர் கிட்டிணன் இராஜதுரை தலைமையில் 21.03.2010 அன்று இம் முகாமிற்கான முதற்கட்ட உதவிகள் எம்மால் வழங்கப்பட்டது. ஆலயத்தினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவந்த உதவியுடன் மேலதிகமாக ஆலயத்திற்குவரும் அடியார்கள்ää தொண்டர்களின் உதவியுடன் உணவுகளும்ää உடுபுடவைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.    

 

தாயகத்தில் எம்மக்கள் படும்துன்பங்களையும் நாம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தினை பெருவிழாவின்போது அடியார்களுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் பலர் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு உதவ முன்வந்தார்கள். இவர்களின் உதவியுடன் அடுத்தடுத்து தொடர்ந்து பல கட்டங்களாக எமது உதவிகள் தாயகத்திற்குப் போய்ச்சேர்ந்து கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் 28.08.2010 அன்று  பல உதவித்திட்டங்களுடன் தாயகத்தில் உத்தியோகபூர்வமாக “மண்சுமந்த மேனியர்” எனும் உதவி அமைப்பு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் புத்திஜீவிகள்ää பாராளுமன்ற உறுப்பினர்கள்ää கல்விமான்கள் எனப்பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவைää சொலத்தூண் தமிழர் நலன்புரிச்சங்கம் என்பன எம்மோடு இணைந்து மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவிப்பணம்ää துவிச்சக்கரவண்டிகள்ää சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்புக்கள் என்பனவற்றை வழங்கியிருந்தார்கள். 

தாயகத்தில் எமது உதவியினை நாடும் மக்களின் எண்ணிக்கை  அதிகரிக்க சுவிஸ்வாழ் உறவுகளின் ஆதரவும் எமக்கு  மென்மேலும் கிடைக்கப்பெற்றது. மண்சுமந்த மேனியர் கட்டமைப்பு ரீதியாக மாற்றம் பெறவேண்டும் என்ற நோக்கோடு மாவட்டங்கள் தோறும் இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். அவர்களுடன் பல தொண்டர்களும் உள்வாங்கப்பட்டு பல அணிகளாக அனைத்து இடங்களிலும் பணியாற்றக் கூடியவாறு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

இவ்வமைப்பின் சேவையினை விரிவுபடுத்த 2011ம் ஆண்டு “மண்சுமந்த மேனியர்” அமைப்பு  “அன்பேசிவம்” என பெயர்மாற்றம் பெற்றது. அன்பேசிவம் தாயகத்தில்; வறுமைக்கோட்டின்கீழ் வாழும்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்ää மாதாந்த பணஉதவிகள்ää துவிச்சக்கரவண்டிகள்ää காலணிகள் போன்றவை வழங்கும் செயற்பாட்டுடன் மாலைநேர இலவசக் கற்கை வகுப்புக்கள்ää அறநெறிப் பாடசாலைகள்ää பாலர் பாடசாலைகள்ää கணனி கற்கை நிலையங்கள்ää  தையல் பயிற்சி நிலையங்கள் போன்றவற்றையும் இலவசமாக நடாத்தி வருகின்றோம். மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கான கிணறுகள் அமைத்துக் கொடுத்தல்ää வாழ்வாதார உதவிகள் வழங்கல் போன்ற பல்வேறு வகையான  தேவைகளை நிறைவேற்றி வருகின்றோம். 

இவ் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள எமது ஆலயத்தில்  விரத நாட்களிலும்ää திருவிழாக் காலங்களிலும் அடியார்களிடம் திட்டங்களின் அடிபடையிலும்ää மடிப்பிச்சை எடுத்தல் மூலமும் நிதியினைச் சேகரிக்கின்றோம். அத்துடன் அடியார்களின் திருமண நாள்ää பிறந்த நாள்ää இறந்த குடும்ப உறவுகளின் சிரார்த்த தினம் போன்ற நாட்களில் அவர்கள் பெயரில் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தி வருகின்றோம். மேலும் எம்மால் நடாத்தப்படுகின்ற அற்றார் அழிபசி தீர்த்தல் விழாவில் தாயக உணவுக் கண்காட்சி நிழக்வின்மூலம் கிடைக்கப்பெறும் நிதியுடன்  ஜனவரி முதலாம் நாள் ஆங்கிலப் புத்தாண்டன்று நடைபெறும் “புத்தாண்டும் புதுநிமிர்வும்” நிகழ்ச்சியிலும்  மடிப்பிச்சை எடுத்து நிதிசேகரித்து வருகின்றோம். 

யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தத்தாலும் அழிந்து போன மரங்களையும்ää சூழலையும் பேணும் வகையில் “வரப்புயர” எனும் மரம்நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டமானது தமிழர்களின் புனித மாதமாகக் கருதப்படும் கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வருடமும்  நடைபெற்று வருகின்றது. வருடந்தோறும் இத்திட்டத்திற்காக ஒருபகுதி நிதியினை ஆலய நிதியிலிருந்தும்ää மிகுதி நிதியினை சு10ரிச்சில் சுவாமிடிங்கன் வட்டார நிகழ்வு நடைபெறும்போது சுவிஸ் மக்களுக்கு சிற்றுண்டிச்சாலை அமைப்பதனூடகப் பெற்றுக்கொள்கிறோம். 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின்மூலம் கடந்த 6 வருடத்தில் 27ää000 இற்கு மேற்பட்ட பயன்தரு மரங்களை தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக வழங்கியுள்ளதுடன் பொது இடங்களிலும் நாம் நாட்டி பராமரித்தும் வருகிறோம்.

இயற்கையும் எம் தாயக மக்களைத் வருத்துகின்றபோது  அனர்த்தங்கள் ஏற்படுகின்ற பிரதேசத்திலுள்ள எமது பிரதிநிதிகள் தெரிவிக்கும் தரவுகளுக்கு அமைவாக உடனடியாகவும்ää முதன்மைச் செற்பாடாகவும் எமது தாயகத் தொண்டர்கள் அவ்விடத்திற்குச் சென்று தொண்டாற்றுகிறார்கள். இவ்வாறு அவசரதேவை ஏற்படுமிடத்து சிவனாலயத் தொண்டர்கள் முதலில் தங்களால் இயன்ற நிதியினை வழகுவதும் பின் நாம் அடியார்களிடம் கேட்பதும் மேலதிகமாக தேவைப்படுமிடத்து சிவனாலய நிதியிலிருந்தும் வழங்கிவருகின்றோம். 

 

தாயகத்தில் வடக்குää கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் (மலையகம்ää தமிழ்நாடு) வறட்சிää மண்சரிவுää வெள்ளப்பெருக்குää புயல் போன்றவற்றினால் எம்மக்கள் அல்லலுற்றபோது எம்உதவிகள் முதலாவதாக வழங்க சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது அன்பேசிவ தொண்டர்களுக்குக் கிடைத்த அருட்கொடையாகும். 

 

சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பேசிவம் அமைப்பு தாயகத்தில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் சிகரமாகவும்ää தாயகத்தின் தலைமைத் தொடர்பு நிலையமாகவும் அமையப்பெற்றுவரும் சிவபுரவளாகம் செயற்பட்டுவரும் என்பதில் ஐயமில்லை. இப்பெரும் தொண்டிற்காக சு10ரிச் சிவன் ஆலய நிர்வாகத்தினருடன் தாயக அன்பேசிவ தொண்டர்களும் இணைந்தவகையில் அன்பேசிவம் அறக்கட்டளை அமையப்பெற்றுள்ளது. 

அன்பேசிவம் அறக்கட்டளையானது இலங்கை அரசின் சட்டத்திற்கு அமைவாக 01.02.2018 முதல் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். இவ் அறக்கட்ளை சு10ரிச் சிவனாலய அடியார்கள் தாயக மக்களுக்கு ஆற்றஎண்ணும் அறப்பணிக்கு செயல்வடிவம்கொடுக்கும் அமைப்பாக தனது சேவையினை விரிவுபடுத்திச் செயற்படும். 

 

அன்பேசிவம் அறக்கட்டளை நிர்வாகம்:

போசகர் திரு. சின்னத்தம்பி சின்னராசா 

(ஓய்வுநிலை அரச கட்டட ஒப்பந்தகாரர்)

ஆலோசகர்கள்: திரு. சின்னராசா இராதாகிருஷ்ணன் 

(தலைவர் சைவத் தமிழ்ச் சங்கம்)

திரு. நடராஜா அனந்தராஜ் 

(வடமாகாண கல்வி அமைச்சரின் முன்னால் பிரத்தியேக செயலாளர்)

திரு. கிட்ணபிள்ளை இராஜதுரை 

(அதிபர்ää யாழ் தேவரயாளி இந்துக் கல்லுரரி;)

திருமதி. வரதராஜன் ஜெயலச்சுமி 

(ஆசிரியைää யாழ் மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரி)

 

தலைவர் திரு. அருமைத்துரை அருளானந்தசோதி (தபால் அதிபர்ää 

  அகில இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளன நிர்வாக பொதுச்செயலாளர்)

செயலாளர் திரு. தில்லையம்பலம் வரதன் 

(அதிபர்ää தெல்லிப்பளை யூனியன் கல்லூரி)

பொருளாளர் சதாசிவம் தனுராஜன்

(உள்ளூராட்சித் திணைக்களம்ää வடமாகாணம்)

 

நிறைவேற்றுப் அதிகாரி திரு. குமரேசன் குமணன்

(திட்ட அமுலாகச் செயலக முன்னாள் கட்டட மேற்பார்வையாளர்ää ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம்ää வட மாகாணம்)

உபதலைவர் வைத்தியகலாநிதி முருகேசு கதிர்காமநாதன்

உபசெயலாளர் திரு. வேலுப்பிள்ளை செல்வகுமார் 

(அதிபர்ää கிளி.தர்மக்கேணி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை)

 

உறுப்பினர்கள்:

திரு. திருநாவுக்கரசு திருநாமசிங்கம் 

(அன்பேசிவம் இணைப்பாளர்ää சைவத் தமிழ்ச் சங்கம் – சுவிஸ்)

திரு. செல்லன் சாம்பசிவம் 

(உபசெயலாளர்ää சைவத் தமிழ்ச் சங்கம் – சுவிஸ்)

திரு. பரராஜசிங்கம் இராதாகிருஷ்ணன் 

(கணக்காய்வாளர்ää சைவத் தமிழ்ச் சங்கம் – சுவிஸ்)

திரு. பரஞ்சோதி சசிதரன்

(பிரதி அதிபர்ää கிளி. முருகானந்தா கல்லூரி)

திரு. குணரத்தினம் கௌரிசங்கர்

(பல்கலைக்கழக மாணவன்)

திரு. ஜெயபாலன் பானுசங்கர்

(பல்கலைக்கழக மாணவன்)

திரு. யோகநாதன் துசியந்தன்

(ஆசிரியர்ää யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி)

திரு. மாணிக்கம் ரஜனிகாந்

(கட்டடக் கலைஞர்)

திரு. செபஸ்தியாம்பிள்ளை ஜோசேப் யேசுராசா

(கணக்காளர்ää மேல் நீதிமன்றம் வவுனியா)

திரு. சோமசுந்தரம் வினோச்குமார்

(பல்கலைக்கழக மாணவன்)

 

சிவபுரவளாகமானது தாயகத்து மக்களின் துயர்போக்கும் ஒரு சிகரமாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்பதோடு புலம்பெயர்ந்து பரந்து பல நாடுகளில் வாழுகின்ற எம்மக்களிற்கு முன்னுதாரண செயற்பாடாக அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. வெள்ளிவிழாக் காணும் வைசத் தமிழ்ச் சங்கமானது தொடர்ந்தும் தனது பணிகளை செவ்வனே செய்ய சூரிச் சிவனிடம் வேண்டிநிற்கின்றேன். 

 

திருநாவுக்கரசு திருநாமசிங்கம்

அன்பேசிவம் இணைப்பாளர்

சைவத் தமிழ்ச் சங்கம்

🌐 மொழியை மாற்ற »