சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

திருவெம்பாவை 2023

திருவெம்பாவை 2023

.

சிவனடியார்;களே! நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் திருவள்ளுவர் ஆண்டு (2054) மார்கழித் திங்கள் 02ம் நாள் 18.12.2023 திங்கட்கிழமை முதல் மார்கழித்திங்கள் 11ம் நாள் 27.12.2023 புதன்கிழமை வரை திருவெம்பாவை பூசை சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது. இத்திருவெம்பாவை விரத நாட்களில் வருகை தந்து எம்பெருமானுக்கு நடைபெறும் பூசைகளில் பங்கு கொண்டும், திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியும் எம்பெருமானின் அருள் பெற்று மகிழ்வோடு வாழ்வதோடு, தாயகத்தில் அல்லலுறும் எமது உறவுகளும் மகிழ்வுற்றிருக்க சிவனருள் வேண்டிச் சிவன்தாள் பணிந்து பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.

திருவெம்பாவை விரதநாட்களில்

    •  அதிகாலை 5.30 மணிக்கு – மூலவர் அபிசேகம்    

    • காலை 6.00 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை

    • காலை 6.30 மணிக்கு – சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு விசேட பூசையும், திருவெம்பாவை பாடுதலும் இடம்பெறும்.

திருவெம்பாவைத் தேர்த்திருவிழா 26.12.2023 செவ்வாய்க்கிழமை

• அதிகாலை 5.00 மணிக்கு – மூலவர் அபிசேகம்

 • அதிகாலை 5.30 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை

 • காலை 6.00 மணிக்கு – நடராஜப் பெருமானுக்கு விசேட பூசையைத் தொடர்ந்து எம்பெருமான் அழகிய தேரில் உள்வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார்

திருவாதிரைத் தரிசனம் 27.12.2023 புதன்கிழமை

   • காலை 5.00 மணிக்கு – நடராஜப் பெருமானுக்கு 108 சங்காபிசேகம் 

    • காலை 6.30 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை 

    • காலை 7.00 மணிக்கு – வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிந்த வண்ணம் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார்.

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” 

 

🌐 மொழியை மாற்ற »