சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

தைப் பொங்கல் 2024

தைப் பொங்கல் 2024

சிவனடியார்களே!

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தைத் திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2055 (15.01.2024) திங்கட்கிழமை தைப் பொங்கல் திருநாளாகும். தெட்சணாயனம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப் பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் எமது ஆலயத்தில் நடைபெற இறையருள் கைகூடியுள்ளது. அடியார்கள் தைத்திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.

தைப்பொங்கல் திருநாளன்று

• காலை 09.00 மணிக்கு காலைப்பூசை

• காலை 10.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு

• காலை 11.30 மணிக்கு மூலவர் அபிசேகம்

• மதியம் 12.00 மணிக்கு தைப்பொங்கல் விசேட பூசை

• இரவு 19.00 மணிக்கு இரவுப்பூசை

• வருடாந்தப் பொதுக்கூட்டம்

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.

அனைவரும் வருக! சிவன் அருள் பெறுக!

🌐 மொழியை மாற்ற »