சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

தைப் பொங்கல், பொதுக் கூட்டம்.

தைப் பொங்கல், பொதுக் கூட்டம்.

சிவனடியார்களே!

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தைத்திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2054 (15.01.2023) ஞாயிற்றுக்;கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயனம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் எமது ஆலயத்தில் நடைபெற இறையருள் கைக்கூடியுள்ளது. அடியார்கள் தைத்திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.


தைப்பொங்கல் திருநாளன்று..


• காலை 09.00 மணிக்கு காலைப்பூசை

• காலை 10.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு

• காலை 11.30 மணிக்கு மூலவர் அபிசேகம்

• மதியம் 12.00 மணிக்கு தைப்பொங்கல் விசேட பூசை

• இரவு 19.00 மணிக்கு இரவுப்பூசை

• வருடாந்தப் பொதுக்கூட்டம்

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள் அனைவரும் வருக! சிவன் அருள் பெறுக!


சிவனடியார்களே!
நிகழும் சர்வமங்களகரமான சுபகிருது வருடம் தைத் திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2054 (15.01.2023) ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கலன்று சைவத் தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும்ää நடைமுறையாண்டு நிர்வாகத் தெரிவும் வழமையான இரவுப் பூசையைத் தொடர்ந்து ஆலய மண்டபத்தில் நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது. அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆக்க பூர்வமான கருத்துக்களை தெரிவிப்பதோடுää ஆலய வளர்ச்சிக்கு உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

பொதுக் கூட்ட நிகழ்வு


• ஆலய பூசை

• தேவாரம்

• அமைதி வணக்கம்

• ஆசியுரை (ஆலயபிரதம குரு)

• தலைமையுரை

• வருடாந்த கூட்டறிக்கை (2022)

• கணக்காளர் அறிக்கை (2022)

• கணக்காய்வாளர் கருத்து.

• 2022 ஆண்டின் மீளாய்வு

• அடியார்கள் கருத்து

• 2023ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபைத் தெரிவு

• 2023 ம் ஆண்டின் ஆலய புதிய நடைமுறை ஆய்வு

• நன்றியுரை

• தேவாரத்துடன் நிறைவடையும்.
அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்!


அருள்மிகு சிவன் கோவில்; சைவத் தமிழ்ச் சங்கம்.

🌐 மொழியை மாற்ற »