மகா சிவராத்திரி நோன்பு 28.02.2022
தேடிக் கண்டுகொண்டேன் – திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.
(அப்பர் சுவாமிகள்)
சிவனடியார்களே!
சைவசித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களில் மூலமாகத் திகழும் ஆணவமலம் தேவாதி தேவர்களையும் பீடித்திருந்தது உண்மையே. இதனை மையமாகக் கொண்டு நான் (பிரம்மா) பெரிது, இல்லை நான் தான் (விஷ்ணு) பெரிது என அகங்காரம் கொண்டு பிரம்மா அன்னப் பறவையாகவும்ää விஷ்ணு பன்றியாகவும் ஒளிப்பிழம்பின் (சிவபெருமானின்) அடி முடி தேடிச் சென்றபோது இறைவன் சோதி வடிவமாகக் காட்சி கொடுத்த தினமே சிவராத்திரி தினமாகும்.
நிகழும் பிலவ வருடம் மாசித் திங்கள் 16ம் நாள் (28.02.2022) திங்கட்கிழமை மகா சிவராத்திரி தினமாகிய அன்று மாலை 17:30 மணிமுதல் காலை 06:00 (01.03.2022) மணிவரை விசேட பூசை வழிபாடுகளும், இலிங்கநாதப் பெருமானுக்கு நான்கு சாம அபிசேகமும் பஜனையும் இடம்பெறும்..
- வழிபாட்டு நிரல்
1ம் சாம பூசை
மாலை 17:30 மணிக்கு ஸ்நபனாபிசேகம், இரவு 19:00 மணிக்கு 1ம் சாம பூசையைத் தொடர்ந்து சந்திரசேகரப் பெருமான் வீதியுலா வருவார்.
2ம் சாம பூசை
இரவு 22:45 மணிக்கு இலிங்கோற்பவ மூர்த்திக்கு உருத்திராபிசேகம், இரவு 23:45 மணிக்கு மூலவர் பூசையினைத் தொடர்ந்து நள்ளிரவு 24:00 மணிக்கு இலிங்கோற்பவ மூர்த்திக்கு விசேட பூசை
3ம் சாம பூசை (01.03.2022)
அதிகாலை 02:30 மணிக்கு அபிசேகம்
அதிகாலை 03:00 மணிக்கு 3ம் சாம பூசை
4ம் சாம பூசை
காலை 05:30 மணிக்கு அபிசேகம்
காலை 06:00 மணிக்கு 4ம் சாம பூசை
பாறணைப் பூசை
01.03.2022 செவ்வாய்க்கிழமை காலை 07:00 மணி.
பூசைகளுக்கு இடையே கலை நிகழ்வுகள் நடைபெறும்
குறிப்பு:
- 01. இலிங்கோற்பவ காலத்தில் இலிங்கநாத பரமேச்சுரப் பெருமானுக்கு நடைபெறும் 1008 வில்வார்ச்சனையில் அடியார்கள் சங்கற்பித்து அர்ச்சனையில் கலந்துகொள்ளலாம்.
- 02. சிவராத்திரி தினத்தன்று அடியார்கள் பிரதோசலிங்கப் பெருமானுக்கு தங்கள் கைகளால் பாலாபிசேகம் செய்யலாம்.
அபிசேகங்களுக்குத் தேவையான பொருட்களை முற்கூட்டியே ஆலயத்தில் சேர்ப்பிக்கலாம்.
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்“