சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

மன அழுத்தம்.

மன அழுத்தம்.

மன அழுத்தம்,

மனஅழுத்தம் இன்று உலகவில் பெருமளவு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். வாழ்வியல் மாற்றங்கள் பொருளாதார சூழ்நிலைகள் குடும்பம் உடல்நலம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவைகள்

மனஅழுத்தம் ஏற்பட கூடிய முக்கிய காரணங்களாகும்.

இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு

கிடையாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மனஅழுத்தம் ஏற்படலாம், ஆனால் அதை அவர்கள் எவ்வாறு கடந்து செல்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

மனஅழுத்ததை நீங்கள் நினைத்தால் எளிதில் அதில் இருந்து விடு பட முடியும் அதற்கான வழிகளும் உள்ளன.

மன அழுத்தம் குறைய எளிய வழிகள் உள்ளன . அவை என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் .

மனஅழுத்தம் குறைய என்ன செய்ய வேண்டும் .

மனஅழுத்தம் அதிகமாக முக்கிய காரணம் உங்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் அந்த பிரச்சனையை பற்றியே எப்பவும் யோசித்து கொண்டே இருப்பது முதலில் அதை கைவிடுங்கள்.

கவலை படுவதை உங்கள் மனதில் இருந்து முதலில் அகற்றுங்கள் அது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவ போவது இல்லை. பிரச்சனைகளை கண்டு

ஒருபோதும் அஞ்சாதீர்கள்.

பிரச்சனைகள் ஏதுவாக இருந்தாலும் நாம் அதற்கான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமே தவிர இப்படி ஆகிவிட்டதே இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன் என்று கவலை படுவது உங்கள் உடல் நலனையும் மன நலத்தையும் வெகுவாக பாதிக்கும்.

நாம் வாழ்கையில் அனைவருக்கும் பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றன. அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பது தான் முக்கியம் .

உங்கள் மேல் முதலில் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையால் தான் இந்த உலகமே இயக்குகின்றன. நமக்கு இப்படி ஆகிவிட்டதே அல்லது என்னால் இந்த பிரச்சனையை சமாளிக்க முடிய வில்லை நினைக்காதீர்கள்.

யாருக்கு தான் பிரச்சனைகள் இல்லை எனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு ஆனால் என்னால் சமாளிக்க முடியும் என்று நினையுங்கள்.

கண்டிப்பாக எல்லா பிரச்சனைகளுக்கும் கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும் நாம் செய்வது சரியா என்று யோசித்து பாருங்கள் .

அப்படியும் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்க வில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள் உங்களுக்கு உள்ள பிரச்சனையை சொல்லி இதற்கு என்ன தீர்வு என்ன முடிவு செய்யுங்கள்.

அல்லது உங்கள் நலன் விரும்பியாக நீங்கள் கருதும் நண்பரிடம் ஆலோசனை கேளுங்கள் கண்டிப்பாக ஒரு தெளிவு உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் மனம் குழப்பமாக உள்ள நேரத்தில் தனிமையை தவிருங்கள் வெளியில் செல்லுங்கள்.

மனம் தெளிவாக இருந்தால் தான் எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மன அழுத்தம் குறைந்து மனம் தெளிவடைந்து சரியான முடிவுகளை எடுக்க இந்த பயிற்சி முறைகள் உங்களுக்கு உதவும்.

நடைப்பயிற்சி செல்லுங்கள்.

தினமும் காலையில் நடைப்பயிற்சி (வாக்கிங் ) சென்று பாருங்கள்.

நடைப்பயிற்சி உங்கள் உடலுக்கு ஆரோக்கியதையும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் மனஅழுத்தம் குறையும்.

ரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு நடைப்பயிற்சி செய்வதின் மூலம் வெகுவாக குறையும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால் சீராகும்.

நண்பர்களோடு நடைப்பயிற்சி செய்யுங்கள் மற்றவர்களோடு நீங்கள் நடைப்பயிற்சி செய்யும் பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

தினமும் நடைப்பயிற்சி செல்ல முடிய வில்லை கூட வாரத்தில் ஒரு மூன்று நாட்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

காலையில் நடைப்பயிற்சி செய்ய நேரம் கிடைக்க வில்லை என்றால் மாலையில் ஒரு முப்பது நிமிடம் நடைப்பயிற்சி செல்லுங்கள் இவை உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

தியானம்.

தியானம் உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய உடல் மற்றும் மனபயிற்சி முறையாகும். தியானம் செய்வது மன அழுத்தைதை குறைக்கும்.

தியான பயிற்சி முறைகளில் நிறைய உள்ளன சிலவகை மூச்சு பயிற்சிகளும் உள்ளன. இவைகளை தகுந்த யோகா ஆசிரியரிடம் கற்று கொண்டு முறையாக பயிற்சி செய்வது நல்ல பலனை தரும்.

தியானம் செய்வதால் மனம் லேசானது போல் உணருவீர்கள். இந்த பயிற்சிகள் செய்வதின் மூலம் மனம் ஒரு தெளிவான நிலையை அடையும். சரியாக சிந்தித்து செயல் பட கூடிய ஆற்றலை தரும்.

உங்களுக்கு பிடித்த வேலையை செய்யுங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேலை செய்ய மிகவும் பிடிக்கும் சிலருக்கு தோட்ட வேலை செய்வது பிடிக்கும் செடிகள் வளர்ப்பது அதனை பராமரிப்பது மிகவும் பிடிக்கும் அந்த வேலையை அவர்கள் செய்யலாம். வீட்டில் குழந்தைகளிடம் விளையாடலாம்.நல்ல புத்தங்கங்கள்

படிக்கலாம்.

உங்களுக்கு பிடித்த காமெடி வீடியோ மற்றும் திரைப்படங்களை பார்க்கலாம்.

உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துருக்க இவை உதவும்.

தூக்கம் மிகவும் அவசியம்.

நாம் உடலும் மனதும் ஓய்வு எடுப்பது தூங்கும் நேரத்தில் தான் . நாம் சொல்வதை எல்லாம் செய்யும் நாம் உடம்பிற்கு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம்.

நல்ல தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்து அடுத்த வேலையை செய்ய நாம் உடலையும் மனதையும் தயார்படுத்தும் எனவே சரியான நேரத்திற்கு தூங்க செல்லுங்கள்.

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது நல்லது அல்ல குறைந்தது ஏழு மணி நேரமாவது தூங்குவது அவசியம் .முடிந்த வரை விரைவாக தூங்க செல்லுங்கள்.

இசை.

இசை கேட்பது மன அழுத்ததை குறைக்கும். உங்கள் மனம் இருக்கமாக தோன்றும் நேரத்தில் நல்ல மென்மையான இசையை கேளுங்கள் அது பாடல்கள் அல்லது இசையாகவும் இருக்கலாம். இசை கேட்பதால் உங்கள் மன இறுக்கம் தளர்ந்து மனம் லேசாகும் .

புகை மற்றும் மது பழக்கம்.

மன அழுத்தம் குறைய சிலர் மது மற்றும் புகை பழக்கத்தை சிலர் நாடுவார்கள் இது மிகவும் தவறானது இது ஒரு தற்காலிக நிவாரணமாக தோன்றினாலும் இது நிரந்தர தீர்வாக அமையாது,

ஒரு கட்டத்தில் மது மற்றும் புகை பழக்கம் இல்லாமல் தூக்கம் வராது என்ற நிலை ஏற்படும். இதுவே உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எனவே மது மற்றும் புகைப்பழக்கதை தவிருங்கள்.

உணவு முறைகள்.

சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள் நேரம் கடந்து சாப்பிடுவது மற்றும் நீண்ட நேரம் பசியோடு இருப்பது போன்றவைகளை தவிருங்கள்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் காய்கறிகள் கீரைகள் பழங்கள்,

போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் உணவில் எண்ணை மற்றும் காரம் அதிகம் சேர்க்காதீர்கள்.

காபி மற்றும் டீ போன்ற பானங்களை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். டார்க் சாக்லேட் சாப்பிடலாம். அது மனஅழுத்தத்தை குறைக்க கூடியது.

தன்னம்பிக்கை.

எப்போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள் என்னால் இந்த செயலை செய்ய முடியும் என்று நம்புங்கள் உங்கள் பிரச்சனையை அடுத்தவர் மீது திணிக்க முயற்சி செய்யாதீர்கள் யாரையும் எதற்காகவும் கட்டாய படுத்தாதீர்கள்.மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியோடு இருங்கள்.

மொழியை மாற்ற »