சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

முகமாலை சிவபுரம் திறப்புவிழா

முகமாலை சிவபுரம் திறப்புவிழா

சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அறக்கட்டளையின் பிரமாண்ட உருவாக்கத்தில் அமையப்பெற்ற சிவபுர வளாகம் முகமாலை மண்ணில் இன்று அற்புதமான நாளில் திறந்து வைக்கப்பட்டது.

முதியோர்கள் பேணலகம் ,பொழுதுபோக்கு அம்சங்கள்,வழிபாட்டு இடங்கள்,பிரமாண்ட உணவுச்சாலை,அரைக்கும் ஆலை,ஆலயம்,நூலகம் என தொடரும் அற்புதமான வசதிகள் பலவற்றை கொண்ட இவ்விடம் இன்று மிக நீண்டகால அன்பே சிவத்தின் மிகக் காத்திரமான உழைப்பால் இன்று வெற்றி கண்டது.

சிவபுர வளாகம் என்னும் நாமம் இடபட்ட இவ் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த பார்வதி பரமேஸ்வர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் உம் இன்று காலை பல அடியவர்கள் கலந்துகொள்ள சிறப்பாக இடம்பெற்றது.

இவ்வாலயத்தின் கட்டுமான உபயத்தினை ஆற்றிய சைவத் தமிழ் சங்கத்தின் முக்கியஸ்தர் கிருஷ்ணா அண்ணா தீபா அக்கா இணையர் முன்னின்று கும்பாபிஷேக நிகழ்வை சிறப்பித்தனர்.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த சைவத் தமிழ் சங்கத்தின் பல்வேறு விதமான முன்னெடுப்புக்கள் பலவாறாக பல்கிப் பெருகும் நிலையில் அன்பே சிவம் வாயிலாக முன்னெடுத்த இக் கைங்கரியம் உண்மையில் மிகச் சிறப்பு.

தாய்ச்சங்கத்தின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் தாங்கி பயணித்துகொண்டு உண்மையிலும் சவால்கள் கஷ்டங்கள் மத்தியில் இந்த அற்புதமான உருவாக்கத்தில் ஆண்டுகள் பல களத்தி லே நின்று பணியாற்றிய அன்பே சிவத்தின் ,தாயக ஒருங்கிணைப்பாளர்கள்,நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

புலத்தில் நின்று இவர்களை வழிநடத்தும் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராதா அண்ணாவின் சிந்தனையும் எண்ணமும் மிக சிறப்பாக செயல்வடிவம் கண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அன்பே சிவம் அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளர் சிங்கம் அண்ணாவின் வழிநடத்தல் உடன் இயங்கும் தாயக ஒருங்கிணைப்பாளர் கு. குமணன் அண்ணா உடன் இணைந்த நிர்வாகத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான

வாழ்த்துக்கள்

.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக சூரிச் சிவனின் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சியிலும் அதனோடு இணைந்த அமைப்புக்களின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி முகமாலையில் அமைய பெற்ற இந்த வளாகம் குறித்து பல்வேறு கனவுகள் கற்பனைகள் உடன் தாயகம் வந்த எங்கள் மகா குரு ரகு ஐயாவின் திடீர் மறைவு எல்லோரையும் வெகுவாக பாதித்திருப்பினும் அவர் விருப்புக்கு ஏற்ப இடம்பெற்ற நிகழ்வுகள் யாவும் அவரை எங்கிருந்தாலும் நிச்சயமாக திருப்தி படுத்தியிருக்கும் என்பது நிதர்சனம்.

இந்த

அருமையான

நிகழ்வில் நாமும் கலந்து கொண்டோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

பாகம் 01

படங்கள் வெற்றி

🌐 மொழியை மாற்ற »