சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் 20.08.2021

சிவனடியார்களே!
அழகிய கிளாட்புறூக் பதியில் கோவில் கொண்டு வேண்டும் அடியார்களின் துயர் நீக்கி பேரருள் பாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல பார்வதி அம்பாள் உடனுறை இலிங்கநாதபரமேச்சுரப் பெருமான் ஆலயத்தில் அனைத்து நலன்களையும் அருளி அடியார்கள் வேண்டும் வரங்களையெல்லாம் தரக்கூடியதுமான வரலட்சுமி விரதம் நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2052, பிலவ வருடம் ஆவணித்திங்கள் 4ம் நாள் (20.08.2021) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறத் திருவருள் கைக்கூடியுள்ளது.
இவ்விரத தினத்தன்று அடியார்கள் வருகை தந்து நடைபெறும் அபிசேகம், பூசை, திருவிளக்குப்பூசை என்பனவற்றில் கலந்து கொண்டு வரலட்சுமி விரத நூலணிந்து, இலட்சுமி தேவியின் பேரருள் பெறுவதோடு எமது தாயக மக்களும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ பிராத்திப்போமாக.

மாலை 16.30 மணிக்கு – பார்வதி அம்பாளுக்கு அபிசேகம்.
இரவு 18.00 மணிக்கு – மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை.
இரவு 18.30 மணிக்கு – சந்திரசேகரப்பெருமானுக்கு விசேட பூசை.
இரவு 19.00 மணிக்கு – சந்திரசேகரப்பெருமான் திருவீதியுலா வருவார்.
இரவு 19.45 மணிக்கு – திருவிளக்குப் பூசை.
இரவு 20.30 மணிக்கு – வரலட்சுமி விரத நூல் வழங்கல்.
இரவு 21.00 மணிக்கு – இறை பிரசாதம் வழங்கல்

குறிப்பு:- விரதம் நோற்கும் அடியார்கள் ஆலயத்தில் முன்பதிவு செய்யவும்.

🌐 மொழியை மாற்ற »