சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

வருடாந்த பெருந்திருவிழா 2024

வருடாந்த பெருந்திருவிழா 2024

சிவனடியார்களே!

எழிலோங்கு சுவிஸ் திருநாட்டில் சூரிச் மாநகரில் கோவில் கொண்டு, சிருஸ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் புரிந்துகொண்டு வேண்டுவோர் வேண்டுவதை வழங்கி அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்ற எல்லாம் வல்ல பார்வதி அம்பாள் உடனுறை இலிங்கநாத பரமேச்சுரப் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆனித்திங்கள் 21ம் நாள் (05.07.2024) வெள்ளிக்கிழமை முதல் ஆடித்திங்கள் ம் நாள் (16.07.2024) செவ்வாய்க்கிழமை வரை வருடாந்த மகோற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. அடியார்கள் இத்திருவிழாக் காலங்களில் ஆசார சீலர்களாக வருகை தந்து, எம்பெருமான் பேரருள் பெறுவதோடு எமது தாயக விடிவிற்கும் எம்பெருமான் அருள் பாலிக்கப் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

  • 05.07.2024 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்திருவிழா
  • 06.07.2024 சனிக்கிழமை பிச்சாடனர் திருவிழா
  • 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாட்சரத் திருவிழா
  • 08.07.2024 திங்கட்கிழமை மாம்பழத் திருவிழா
  • 09.07.2024 செவ்வாய்க்கிழமை கைலாசவாகனத் திருவிழா
  • 10.07.2024 புதன்கிழமை குருந்தமரத் திருவிழா
  • 11.07.2024 வியாழக்கிழமை வேட்டைத் திருவிழா
  • 12.07.2024 வெள்ளிக்கிழமை சப்பறத் திருவிழா, ஆனி உத்தரம்
  • 13.07.2024 சனிக்கிழமை தேர்த் திருவிழா
  • 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழா, கொடியிறக்கம்
  • 15.07.2024 திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழா
  • 16.07.2024செவ்வாய்க்கிழமை வைரவர் திருவிழா                                     

 

மஹோற்சவ பூர்வாங்க கிரியைகள்

04.07.2024 வியாழக்கிழமை மாலை 17.00 மணிக்கு கணபதிகோமம், அனுக்ஞை, கிராமசாந்தி பிரவேசபலி, வாஸ்துசாந்தி முதலியன நடைபெறும்.

கொடியேற்றம் 05.07.2024 வெள்ளிக்கிழமை

05.07.2024 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு அபிசேகம், 9.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு விசேட பூசை. நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றம். தொடர்ந்து, விநாயகப் பெருமானும், சந்திரசேகரப் பெருமானும், முருகப் பெருமானும் உள்வீதி வலம்வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து இறைபிரசாதம் வழங்கப்படும்.

ஆனி உத்தர நடேசரபிசேகம் சப்பறத்திருவிழா 12.07.2024 வெள்ளிக்கிழமை

அதிகாலை 06.00 மணிக்கு சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜப் பெருமானுக்கு 1008 சங்காபிசேகம் நடைபெற்று காலை 09.30 மணிக்கு மூலவர் பூசை, கொடித்தம்பப் பூசை. 11.00 மணிக்கு வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜப் பெருமானும், சந்திரசேகரப் பெருமானும் உள்வீதி வலம்வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.

தேர்த்திருவிழா 13.07.2024 சனிக்கிழமை

13.07.2024 சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு அபிசேகம், 7.30 மணிக்கு மூலவர் பூசை. 09.00 மணிக்கு வசந்தமண்டப் பூசை. 10.00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளி முற்பகல் 10.30 மணிக்கு தேரில் எழுந்தருளிக் காட்சி தருவார். 11.00 மணிக்கு பெருமானது சித்திரத் தேர் நகர்வு, பிற்பகல் 13.00 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடைந்து 14.00 மணிக்கு எம்பெருமானுக்குப் பச்சை சாத்தி தேரடியில் பஞ்சமுகார்ச்சனை நடைபெற்று ஆலயத்திற்கு எழுந்தருள்வார். இரவு 20.00 மணிக்கு தேரடித் திருவிழா நடைபெறும்.

தீர்த்தத் திருவிழா 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு இலிங்கநாத பரமேச்சுரப் பெருமானுக்கு 108 சங்காபிசேகம், காலை 08.30 மணிக்கு மூலவர் பூசை. கொடித்தம்பப் பூசை. திருப்பொற்சுண்ணமிடித்து 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து விநாயகப் பெருமானும், சந்திரசேகரப் பெருமானும், முருகப்பெருமானும் தீர்த்தமாட எழுந்தருளி 12.00 மணிக்கு தீரத்தமாடி தொடர்ந்து ஆலயத்திற்கு எழுந்தருளி யாக அபிசேகம் நடைபெற்று இறைபிரசாதம் வழங்கப்படும்.

மாலை 17.00 மணிக்கு மூலவர் பூசையைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசை, கொடித்தம்பப்பூசை நடைபெற்று இரவு 19.30 மணிக்கு கொடியிறக்கம் மௌனோற்சவம், சண்டேஸ்வர உற்சவம். ஆச்சார்ய உற்சவம் நடைபெற்று இறைபிரசாதம் வழங்கப்படும்.

பூங்காவனத் திருவிழா 15.07.2024 திங்கட்கிழமை 

திங்கட்கிழமை மாலை 16.00 மணிக்கு அபிசேகம் 17.30 மணிக்கு மூலவர் பூசை, 18.30 மணிக்கு பார்வதி அம்பாளுக்கும் பரமேச்சுரப் பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று, இரவு 19.45 மணிக்கு பூங்காவனத்திற்கு எழுந்தருளி திருவூஞ்சலாடி தொடர்ந்து திருவீதியுலாவந்து, அடியார்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து இறைபிரசாதம் வழங்கப்படும்.

வைரவர் திருவிழா 16.07.2024 செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை மாலை 16.30 மணிக்கு வைரவப் பெருமானுக்கு அபிசேகம், 18.00 மணிக்கு மூலவர் பூசை தொடர்ந்து, 18.45 மணிக்கு வைரவப் பெருமானுக்கு மகோற்சவப்பூர்த்தி விசேடபூசை நடைபெற்று வைரவப் பெருமான் திருவீதியுலாவந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.

🌐 மொழியை மாற்ற »