சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

கந்தசட்டி விரதம் 2025

கந்தசட்டி விரதம் 2025

முருகனடியார்களே!
குகவிரதங்களுள் தலைசிறந்ததுவும், மிகவும் மகிமை வாய்ததுவும், அனுட்டிக்கும் அடியார்களின் இன்னல்களை நீங்கி வேண்டிய  வரங்களை அளித்து இகபர சுகங்களை வழங்கக் கூடிய சிறப்பு வாய்ந்தது கந்தசட்டி விரதமாகும். பார்வதி அம்பாள் உடனுறை இலிங்கநாதப் பரமேச்சுரப் பெருமான் ஆலயத்தில் நிகழும் மங்களகரமான 2056 திருவள்ளுவர் ஆண்டு விசுவாவசு வருடம் ஐப்பசித்திங்கள் 05ம் நாள் 22.10.2025  புதன்கிழமை முதல் ஐப்பசிதிங்கள் 11ம் நாள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை வரை          சிறப்பாக நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது. அடியார்கள் இவ்விரததினங்களில் வருகைதந்து முருகப்பெருமனுக்கு நடைபெறும்   அபிசேகம், பூசை, திருவிழா என்பவற்றில் கலந்து கொண்டு குகனருள் பெறுவதோடு உலகம் வாழ்  தமிழ் மக்கள் செல்வச் செழிப்போடு நிறைவாக வாழ  வேண்டுவோமாக. 
 

காலை 

09:30 மணி முருகப்பெருமானுக்கு அபிசேகம்

10:45 மணி மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை

11:30 மணி வசந்தமண்டப பூசை

12:00 மணி முருகப்பெருமான் திருவீதியுலாவந்து அடியார்களுக்கு 

அருள்பாலிப்பார்

12:45 மணி அடியார்கள் திருக்கும்பத்திற்கு மலர் வழிபாடு செய்தல் 

13:15 மணி இறைபிரசாதம் வழங்கப்படும்.

மாலை 
16:30 மணி முருகப்பெருமானுக்கு அபிசேகம்
17:45 மணி மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
18:30 மணி வசந்த மண்டப பூசை
19:15 மணி முருகப்பெருமான் திருவீதியுலா வந்து 
அடியார்களுக்கு அருள்பாலிப்பார்
 20:15 மணி அடியார்கள் திருக்கும்பத்திற்கு மலர் வழிபாடு செய்தல் 
  21:00 மணி இறைபிரசாதம் வழங்கப்படும்.
 
 
சண்முகார்ச்சனை (27.10.2025) திங்கட்கிழமை
மதியம் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து ஆறுமுகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனை நடைபெறும். அடியார்கள் அனைவரும் சண்முகார்ச்சனையில் சங்கற்பம் செய்து பங்குபற்றி ஆறுமுகப்பெருமானின் அருள்பெற்று உய்யலாம்.
 
சூரன்போர் 27.10.2025 திங்கட்கிழமை
மாலை 16:00 மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
16:45 வசந்தமண்டப பூசை
17:30 ஆறுமுகப்பெருமான் சூரன்போரிற்கு எழுந்தருள்வார்
19:00 பிராயச்சித்த அபிசேகம்
19:30 அடியார்களுக்கு சங்கற்பித்து விசேட அர்ச்சனை நடைபெறும் 
20:00 அடியார்கள் திருக்கும்பத்திற்கு மலர்வழிபாடு செய்தல் 
21:00 இறைபிரசாதம் வழங்கல் 
 
 
 
பாறணைப்பூசை 28.10.2025 செவ்வாய்க்கிழமை
அதிகாலை 05:45 மணிக்கு முருகப்பெருமானிற்கு அபிசேகம்
06:15 மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
07:00 அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
 
 
திருக்கல்யாணம் 28.10.2025 வெவ்வாய்க்கிழமை
மாலை 16:30 முருகப்பெருமானுக்கு விசேடஅபிசேகம்
17:30 மூலமூர்த்திகளுக்கு விசேட பூசை
18:30 முருகப்பெருமானுக்கும் வள்ளி, தெய்வானை அம்பாளிற்கும் 
திருக்கல்யாணம் நடைபெற்று தொடர்ந்து முருகப்பெருமான் 
  வீதியுலாவந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். 
21:15 இறைபிரசாதம் வழங்கப்படும். 
 
 
குறிப்பு : விரதநாட்களில் அபிசேகத்திற்குத் தேவையான பால், தயிர், இளநீர், 
பழங்கள், பூக்கள் என்பனவற்றை ஆலயத்தில் வழங்கலாம். விரதமிருக்கும் அடியார்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் என்பனவற்றை பதிவு செய்துகொள்ளவும்.
 
 
🌐 மொழியை மாற்ற »