சிவனடியார்களே!
மலரவிருக்கும் மங்களகரமான பராபவ எனும் பெயர் கொண்ட புதுவருட சிறப்புப்பூசை வழிபாடுகள்; திருவள்ளுவர் ஆண்டு 2057 சித்திரைத் திங்கள் 1ம் நாள் (14.04.2026) செவ்வாய்க்கிழமை இலிங்கநாத பரமேச்சுரப் பெருமான் ஆலயத்தில்; சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. பராபவ வருடம் 14.04.2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.11 மணிக்கு பிறப்பதனால் அந்நேரத்திலும்; தொடர்ந்தும் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடு நடைபெறும். அத்தருணம் சிவனடியார்கள் அனைவரும் வருகைதந்து நாமும், எம் தாயக மக்களும் இன்னல்கள் நீங்கி இன்புற்று வாழ எம்பெருமானை வேண்டி அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
விஷு புண்ணிய காலம்
14.04.2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை 01.11 மணி முதல் 09.11 மணிவரை
கைவிசேட சிறப்பு நேரம்
15.04.2026 புதன்கிழமை காலை 10.31 மணிமுதல் 12.09 மணி வரை
கைவிசேட சிறப்பு நேரம்
15.04.2026 புதன்கிழமை காலை 10.31 மணிமுதல் 12.09 மணி வரை
14.04.2026 செவ்வாய்க்கிழமை
காலை 9.00 மணி காலை விசேட பூசை
நண்பகல் 12.00 மணி மதிய விசேட பூசை
இரவு 19.00 மணி இரவு விசேட பூசை
ஆலயம் திறக்கும் நேரம் :
14.04.2026 காலை 05.00 மணிமுதல் இரவு 21.00 மணிவரை திறந்திருக்கும்
சங்கிரம தோச நட்சத்திரங்கள்
திருவாதிரை, புனர்பூசம் 4ம் கால், பூசம், ஆயிலியம், சுவாதி, அவிட்டம் 3ம், 4ம் கால்கள் சதயம், பூரட்டாதி 1ம்,2ம்,3ம் கால்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து தலைநீராடி தானதர்மம் செய்து சங்கிரம தோசத்தை நிவர்த்தி செய்யலாம்.
மருத்துநீர் 13.04.2026 திங்கட்கிழமை காலை 09:00 மணிமுதல் வழங்கப்படும்

