சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

வருடாந்த பொதுக்கூட்டம் 2024

வருடாந்த பொதுக்கூட்டம் 2024


சிவனடியார்களே!

நிகழும் சர்வமங்களகரமான சுபகிருது வருடம் தைத் திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2055 (15.01.2024) திங்கட்கிழமை தைப்பொங்கலன்று சைவத் தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், நடைமுறையாண்டு நிர்வாகத் தெரிவும் வழமையான இரவுப் பூசையைத் தொடர்ந்து ஆலய மண்டபத்தில் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆக்க பூர்வமான கருத்துக்களைத் தெரிவிப்பதோடு, ஆலய வளர்ச்சிக்கு உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

பொதுக் கூட்ட நிகழ்வு


• ஆலய பூசை

• தேவாரம்

• அமைதி வணக்கம்

• ஆசியுரை (ஆலயபிரதம குரு)

•தலைமையுரை

• வருடாந்த கூட்டறிக்கை (2023)

• கணக்காளர் அறிக்கை (2023)

•கணக்காய்வாளர் கருத்து.

• 2023ம் ஆண்டின் மீளாய்வு

• அடியார்கள் கருத்து

• 2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபைத் தெரிவு

• 2024ம் ஆண்டின் ஆலய புதிய நடைமுறை ஆய்வு

• நன்றியுரை

• தேவாரத்துடன் நிறைவடையும்.

🌐 மொழியை மாற்ற »