சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

விநாயகர் சதுர்த்திவிரதம் – 10.09.2021 வெள்ளிக்கிழமை

விநாயகர் சதுர்த்திவிரதம் – 10.09.2021 வெள்ளிக்கிழமை

திருவாக்கும் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலாற் கூப்புவர்தம் கை”


சிவனடியார்களே!
விக்கினங்கள் அனைத்தையும் தீர்த்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல விநாயகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததுவும்ää அனைத்து நலன்களையும் தரக்கூடியதுமாகிய விநாயக சதுர்த்தி விரதம் நிகழும் மங்களகரமான பிலவ வருடம், திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆவணித் திங்கள் 25ம் நாள் (10.09.2021) வெள்ளிக்;கிழமை வருகின்றது. அன்றைய தினம் எமதாலயத்தில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேகம், பூசை, திருவிழா என்பனவெல்லாம் வெகு சிறப்பாக நடைபெற இறையருள் கைக் கூடியுள்ளது. அடியார்கள் அத்தினத்தன்று வருகை தந்து எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் அருள்பெறுவதோடு எமது தாயக விடிவிற்காகவும் பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.


மாலை 16.30 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு அபிசேகம்
இரவு 17.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு விசேட பூசை
இரவு 18.00 மணிக்கு வசந்தமண்டப் பூசை
இரவு 19.00 மணிக்கு விநாயகப் பெருமானும், சந்திரசேகரப்பெருமானும் திருவீதியுலாவந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பாரகள். தொடர்ந்து இறை பிரசாதம் வழங்கப்படும்.


குறிப்பு-  இடர்கால சுகதார நடைமுறைகளை பின்பற்றவும்.

🌐 மொழியை மாற்ற »