சிவனடியார்களே!
சைவசித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களில் மூலமலமாகத் திகழும்
ஆணவமலம் தேவாதி தேவர்களையும் பீடித்திருந்தது உண்மையே. இதனை மையமாகக் கொண்டு நான்
(பிரம்மா) பெரிதுரூபவ் இல்லை நான் தான் (விஷ்ணு) பெரிது என இருவரும் அகங்காரம் கொண்டு
பிரம்மா அன்னப் பறவையாகவும்ரூபவ் விஷ்ணு பன்றியாகவும் ஒளிப்பிழம்பின்
(சிவபெருமானின்) அடி முடி தேடிச் சென்றபோது இறைவன் சோதி வடிவமாகக் காட்சி கொடுத்த
தினமே மகாசிவராத்திரி தினமாகும்.
நிகழும் விசுவாவசு வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2057 மாசித் திங்கள் 03ம் நாள் (15.02.2026)
ஞாயிற்றுக்;கிழமை மகா சிவராத்திரி தினமாகிய அன்று மாலை 17.30 மணிமுதல் மறுநாள்
காலை 06.00 மணி வரை விசேட பூசை வழிபாடுகளும்ரூபவ் இலிங்கநாதப் பரமேச்சுரப் பெருமானுக்கு
நான்கு சாம அபிசேகமும் பூசையும் இடம்பெறவுள்ளது.
வழிபாட்டு நிரல்..
1ம் சாமப்பூசை
15.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 17.30 மணிக்கு
ஸ்நபநாபிசேகம்ரூபவ் இரவு 19.00 மணிக்கு முதலாம் சாமப் பூசையைத்
தொடர்ந்து சந்திரசேகரப் பெருமான் திருவீதியுலா வருவார்.
2ம் சாமப்பூசை
15.02.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 22.45 மணிக்கு இலிங்கோற்பவ மூர்த்திக்கு
உருத்ராபிசேகம்ரூபவ் இரவு 23.45 மணிக்கு மூலவர் பூசையினைத் தொடர்ந்து நள்ளிரவு 12.00
மணிக்கு இலிங்கோற்பவ மூர்த்திக்கு விசேட பூசை.
3ம் சாமப்பூசை
16.02.2026 திங்கட்கிழமை அதிகாலை 02:30 மணிக்கு அபிசேகம் அதிகாலை 03:00 மணிக்கு 3ம் சாமப் பூசை.
4ம் சாமப்பூசை
16.02.2026 திங்கட்;கிழமை காலை 05:30 மணிக்கு அபிசேகம் காலை 06:00 மணிக்கு 4ம் சாமப் பூசை.
குறிப்பு:
- இலிங்கோற்பவ காலத்தில் இலிங்கநாதபரமேச்சுரப் பெருமானுக்கு நடைபெறும் 1008
வில்வார்ச்சனையில் அடியார்கள் சங்கற்பித்து அர்ச்சனையில் கலந்துகொள்ளலாம்.
- சிவராத்திரி தினத்தன்று அடியார்கள் பிரதோசலிங்கப் பெருமானுக்கு தங்கள் கைகளால்
பாலாபிசேகம் செய்யலாம்.