சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

ஆரம்பம் 26.07.1994 அன்று சூரிச் Volkhaus மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கல் தினத்தன்று பொதுக்கூட்டம் நடைபெற்று நிர்வாகசபை தெரிவுசெய்யப்படும்.

கோவில் ஆரம்பம்:

ஆரம்பம்முதல் வௌ;ளிக்கிழமைதோறும் ஏழடமளாயரள மண்டபத்தில் சிறிய மண்டபத்தை வாடகைக்கு அமர்த்தி வழிபாடு செய்துவந்தோம்.1994 இல் Wehntalerstrasse. 293, 8051 Zuerich இல் மண்டபம் வாடகைக்கு எடுத்து கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
2002இல் Glattbruggக்கு மாற்றம் செய்யப்பட்டது.
2014இல் ஆலயக் கட்டடம் கொள்வனவு செய்யப்பட்டது.

மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள்:

சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்கள்: சைவத் தமிழ்ச் சங்கம் ஆரம்பமுதல் இன்றுவரை தமிழ்மொழி, சைவசமய அறிவினை மேம்படுத்துவதற்காக சரஸ்வதிபூசையினை முன்னிட்டு வருடந்தோறும் மாணவர்களுக்கான போட்டி கலைவாணிவிழாவினை நடாத்திவருகின்றோம்.

சுவிஸ்வாழ் தமிழ் மக்கள்:

துறைசார்ந்தவர்களைக்கொண்டு மக்களுக்கான ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல். இலங்கையில் யுத்தால் இறந்த அனைவரையும் நினைத்து வணங்குவதற்காக ஆலய மண்டபத்தில் நினைவாலயம் அமைத்து அனைவரும் வழிபட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூதாளர் அன்பு இல்லத்தினை நடாத்துதல்:

இங்கு வாழும் எம் உறவுகள், முதிர் நிலையை அடைந்தவர்களையும், தாதியர் துணையுடன் வாழ்கையை நடாத்துபவர்களையும் ஆற்றுப்படுத்தி தமிழில் பேசி அரவணைத்து. (தாதியர், பணியாளர்கள், வைத்தியர் தமிழ் பேசக் கூடியவர்களை பணிக்கு அமரத்;துதல்;) மூதாளர் அன்பு இல்லத்தில் வசிக்ககூடிய வசதியனை செய்துள்ளோம்.

சுற்றுலாக்களை ஒழுங்குபடுத்தல்:

தொண்டர்கள் அனைவரும் சேவை அடிப்படையில் தொண்டாற்றுபவர்கள். தொண்டாற்றும் தொண்டர்கள் ஒன்று சேர்ந்து சுற்றுலா அழைத்துச் செல்லுதல். விழாக்களை தாயகத்துக்கு இணையாக மிகப் பிரமாண்டமாக ஒழுங்குபடுத்தல்

ஆலய இணையத்தளம்:

தமிழ் மக்களும், சுவிஸ் மக்களும் ஆலயம் சார்ந்த விபரங்களை அறிந்துகொள்வதற்கும், சைவசமயத்தின் அடிப்படை விடயங்களை அறிந்துகொள்வதற்கும் ஏற்றவாறு இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையவானொலி:

பக்திமலர்கள் என்ற பெயரில் 24மணிநேர இணையவானொலியினை நடாத்திவருகின்றோம்.

சிவன் தொலைக்கட்சி (சிவன் டிவி):

எமது ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சமய சொற்பொழிவு போன்றவற்றை எமது இணைய தொலைக்காட்சி மூலம் நேரடியாகவும் பின்பு பதிவிலும் உலக சைவ மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். அதே பேன்று தாயகத்தில் நிகழும் ஆலயங்களின் விழாக்களை நேரடியாகவும், பதிவு செய்தும் ஒளிபரப்பு செய்து வருகின்றோம்.

அந்திம சேவை:

எம்மவர்கள் இங்கு (சு+ரிச்) வாழ்ந்து பின் இறை பதம் அடையும் இடத்து அவர்களின் மரணச்சடங்கில் கலந்து கொண்டு அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதோடு, மரணச் சடங்கு நடக்கும் நாளன்று மதிய உணவினை இலவசமாக வழங்கிவருகின்றோம்.

சுவிஸ் மாணவர்கள், சுவிஸ் மக்கள்:

சுவிஸ் பாடசாலை மாணவர்களுக்கு சைவசமய விளக்க வகுப்புக்களை ஒழுங்குபடுத்தல். ஏனைய மதத்தவர்களுக்கு சைவசமயத்தினையும், தமிழர் கலாச்சாரத்தையும் எடுத்துக்கூறல்.

தாயக வறிய மாணவர்கள், மக்கள்:

ஆலய பராமரிப்பில் மீதப்படுத்தப்படும் நிதியிலும், மக்களிடம் குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவென சேகரிக்கும் நிதியையும் கொண்டு ஆலயம் ஆரம்பித்த காலமுதல் வறிய மாணவர்கள், மக்களுக்கான சேவையினை வழங்கிவருகின்றோம். அன்பே சிவம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் தாயகத்தில் போரினாலும், இயற்க்கை அனர்த்ததினாலும் வறுமையின் பிடியில் வாழும் எம்முறவுகளை தேவையறிந்து உதவிவருகின்றோம்.

இயற்கை பாதுகாப்பு:
வரப்புயர மரநடுகைத் திட்டம்

இயற்கையின் சீற்றத்தாலும், போரினாலும் எமது தாயகத்தில் மரங்கள், காடுகள் அழிந்த நிலையில் இன்று மிகுந்த வெப்பத்தால் நீர் நிலைகள் வற்றி வறண்ட நிலையில் விவசாயம் செய்யக் கூடிய நிலங்கள் பெருபாலும் விவசாயத்திற்கு பயன்னற்ற நிலை காணப்படுகின்றது. அதனை கருத்தில் கொண்டு தாயகத்தில் வருடந்தம் தோறும். தீபாவழியை முன்னிட்டு (நவம்பர் மாதம); வரப்புயர மரநடுகைத்திட்டம் அறிமுகப்படுத்தி, தாயகத்தில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி மரநடுகையினை ஊக்குவித்து வருகின்றோம்.