சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.
Loading Events

« All Events

  • This event has passed.

தைப் பொங்கல்

ஜனவரி 14, 2021 @ 9:00 காலை - 9:00 மணி UTC+1

உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும்.

பொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு. சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள். இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய பொங்கல் விழா. இந்திர விழா அக்காலத்தில் கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டதாம். இந்திரனுக்கான விழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்திரனின் கரும்பு வில்லை நினைவு கூரும் விதமாக கரும்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. உத்தராயண காலத்தின் தொடக்க நாட்களை போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள் (மாட்டுப் பொங்கல்) என கொண்டாடுகிறார்கள் இப்போது. தற்போது காணும் பொங்கலும் கடைசி நாள் விழாவாக இணைந்துள்ளது. அதைப் பற்றிக் காண்போம்..

போகி:

போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. போக்கி என்பதுதான் மருவி, போகி என்றாகி விட்டது. அதாவது பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படை இது. அசுத்தங்களைப் போக்கி சுத்தத்தை வரவேற்பது எனபது இந்தப் பண்டிகையின் தாத்பர்யம். அசுத்தம் என்பது வீட்டில் மட்டுமல்லாது நமது மனதிலும் உள்ள அசுத்தங்களைப் போக்குவது,. துயரங்கள், துன்பங்கள், கவலைகளைப் போக்குவது என்றும் பொருளாகும். போகிப் பண்டிகை பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும் இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is pongal.jpg

பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும்.இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்பாடு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

தைப்பொங்கல்

பொங்கல் திருநாள்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா

தைப்பொங்கல் வரலாறு

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்க வைக்கும் முறை

தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்

தமிழர் தேசிய விழா

பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல்

வைத்துக் கொண்டாடுகின்றனர்.தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.

உழவர் திருநாள்

தமிழர் விழாக்களும் கொண்டாட்டங்களும்

தைப்பொங்கல்

இந்திர விழா

தமிழ்ப் புத்தாண்டு

மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!

பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

This image has an empty alt attribute; its file name is maddu-pongal.jpg

Details

Date:
ஜனவரி 14, 2021
Time:
9:00 காலை - 9:00 மணி UTC+1

Venue

Location
Shiva Temple, Industriestrasse 34,
Industriestrasse, Opfikon 8152 Switzerland
+ Google Map
Phone
+41 (0) 44 371 02 42
View Venue Website
🌐 மொழியை மாற்ற »